×
 

அண்ணன் வர்றார் வழிவிடு... நாளை மறுநாள் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி... எங்கு தெரியுமா?

தேர்தல் நடத்தும் அலுவலரின் 12 பொது நிபந்தனைகள் மற்றும் காவல்துறையின் 22 நிபந்தனைகளுடன் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் 13ஆம் தேதி விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை பரிந்துரையின் பேரில் தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் நெல்லை, மதுரையில் மாஸ் காட்டிய விஜய் இன்று கடலூரில் மாவட்டத்தில் கடலூர், வடலூர்,விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளவிருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இன்றைய பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக தமிழக வெற்றிக்கழகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். பிரச்சாரம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: விஜயை ஆட்சியில உட்கார வையுங்க..! எல்லா பிரச்சனையும் முடியும்..! வேலூர் தவெக வேட்பாளர் உறுதி..!

இதனிடையே, கவரைப்பேட்டை கீழ்முதலம்பேடு பகுதியில் தனியார் நிலத்தில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார். பிரச்சாரம் மேற்கொள்ள 13ஆம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 

  • விஜய் வரும் பிரச்சார வாகனத்தை யாரும் தொடர்ந்து இருசக்கர வாகனங்களிலோ, பிற வாகனங்களிலோ அணிவகுத்து ரேலி செல்லக்கூடாது; பிரச்சார வாகனத்தின் மீது ஏறுவது, தொங்குவது கூடாது.
  • உயர் கோபுரங்கள், மின் கம்பங்கள், மரங்கள், கட்டிடங்கள் போன்றவற்றில் ஏறவோ உட்காரவோ அனுமதி இல்லை 
  •  பாலத்தின் மீது ஏறுவதோ சாகசம் செய்வதோ சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது 
  • பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர சேவை வாகனங்கள் செல்ல உடனடியாக வழி விட வேண்டும்
  • மேலும் குடிநீர், கழிப்பறை, மருத்துவம் ஆம்புலன்ஸ், தீயணைப்பு சாதனங்கள் போன்றவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி

தேர்தல் நன்நடத்தை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கான முன் ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்

இதையும் படிங்க: விஜய்க்கு என்ன ஆச்சு??...விடிந்ததுமே தவெகவினர் தலையில் இறங்கிய பேரிடி... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share