×
 

கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கூட்டணி குறித்தக் கேள்விகளுக்குப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி, கே.வி.பி (KVB) கார்டனில் நாளை (பிப்ரவரி 13) தவெக தலைவர் விஜய் தலைமையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காகச் சேலம் வந்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இன்று அம்மாபேட்டை தில்லை நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தவெக மத்திய மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின், புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர் பார்த்திபன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அவர்கள் கூறிய முக்கியத் தகவல்கள்:

இதையும் படிங்க: திமுகவின் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது: சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆவேசம்!

நாளை நடைபெறும் கூட்டத்திற்கு உரிய அனுமதி அட்டை உள்ள 4,998 நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 12 மணி முதல் அனுமதி தொடங்கும். அனுமதி அட்டை இல்லாதத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கூட்டத் திடலுக்கு வரவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வீட்டில் இருந்தே நேரலையில் நிகழ்ச்சியைக் கண்டு களிக்கலாம். கூட்டத் திடலில் பாதுகாப்பு கருதி 25 சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நிர்வாகிகள் நிற்பதற்காக 18 தனித்தனி பாக்ஸ்கள் (Boxes) அமைக்கப்பட்டுள்ளன. அவசரத் தேவைகளுக்காக 15 மருத்துவக் குழுக்கள், 6 சிறப்பு மருத்துவ முகாம்கள், 15 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கியக் குழுவினர் ஆம்புலன்ஸ் வசதிகளுடன் தயார் நிலையில் இருப்பார்கள்.

விஜய் வரும் வழியில் தொண்டர்கள் யாரும் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்க மாட்டார்கள். பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸார் மற்றும் கட்சியின் தன்னார்வப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 700 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் அனைத்து நிபந்தனைகளுக்கும் தவெக முழு ஒத்துழைப்பு வழங்கும். செய்தியாளர்களின் கூட்டணி குறித்தக் கேள்விக்குப் பதிலளித்த புஸ்ஸி ஆனந்த், "கூட்டணி தொடர்பாக எந்த ஒரு முடிவாக இருந்தாலும், அதை எமதுத் தலைவர் விஜய் அவர்கள் தான் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சேலம் தவெக-வின் கோட்டையாக மாறி வருவதைச் சுட்டிக்காட்டிய நிர்வாகிகள், நாளைய நிகழ்வு 2026 தேர்தலுக்கான ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விஜய் ஒரு ஏமாற்றுகாரர்; செங்கோட்டையன் ஊழல்வாதி! தவெக-வை விளாசும் பி.டி. செல்வகுமார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share