×
 

பரபரப்பு வீடியோ...!! - விஜய் வாகனத்தை பின் தொடர்ந்த தவெகவினர்... கொத்தாக விபத்தில் சிக்கிய பகீர் காட்சிகள்...!

தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் சக்கர வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி 5 பேர் காயம்

தூத்துக்குடி தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிரச்சார வாகனத்தை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் சக்கர வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி 5 பேர் காயம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை ஆதரித்து விபச்சாரம் செய்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் தூத்துக்குடி நெல்லை நான்கு வழி சாலை வழியாக நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது பிரச்சார வாகனத்தை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தனர். அப்போது தூத்துக்குடி வாகைகுளம் அருகே செல்லும்போது ஒரு இருசக்கர வாகனம் மற்றொரு இருசக்கர வாகனத்தின்  மீது மோதியது.

இதையும் படிங்க: தில்லா, கட்ஸா, கெத்தா இதை சொல்ல முடியுமா? - திமுக, அதிமுகவுக்கு நேரடி சவால் விட்ட விஜய்...!

இதில் நிலைதடுமாறி பின் தொடர்ந்து வந்த ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்த தமிழக வெற்றி கழக தொண்டர்கள் கீழே விழுந்தனர். இதில் ஐந்து பேர்  காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதனிடையே,  விஜய் திருநெல்வேலி சென்ற பின்னர் விதிமீறி அவரது வாகனத்திற்கு பின்னால் சென்ற ரசிகர்களின் கார்களையும் இருசக்கர வாகன சாவிகளையும் எடுத்து போலீசார் வாகனங்களை வழிமறித்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. விஜய் வாகனம் சென்ற பின்னர் சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு வாகனங்களை ஒன்றிண் பின் ஒன்றாக  அனுப்பி போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதையும் படிங்க: விஜய் பின்னால் செல்லும் இளைஞர்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share