×
 

மீண்டு வந்த தவெக... மீண்டும் மக்கள் சந்திப்பு... சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்க விஜய் திட்டம்..!

சேலத்தில் இருந்து மீண்டும் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது.

விஜய் விரைவில் கரூருக்கு செல்வார் என்று கூறப்பட்டது. அதற்காக காவல்துறை அனுமதி கேட்டு கடிதமும் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் தெரிவித்தார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் முடங்கியது. பிறகு கட்சிப் பணிகளை மெல்ல தொடங்கினார் விஜய்.

இதையும் படிங்க: விறுவிறு SIR… களத்தில் தவெக… அதுக்கு 16 பேர் கொண்ட குழு வெச்சு இருக்காங்களாம்…!

இந்த நிலையில் மீண்டும் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலத்தில் இருந்து தனது மக்கள் சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்க இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்... காங்கிரஸில் இணைய முடிவெடுத்த விஜய்... சீக்ரெட் மீட்டிங் உண்மையை போட்டுடைத்த ஜோதிமணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share