×
 

த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு சட்டசபையில் பதிலடி.. அதிர வைத்த முதல்வர் விஜய் உரை..!! ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்!!

திமுகவின் 50 ஆண்டுகால ஊழல் முறைகேடுகளைத் தோண்டி எடுத்து அம்பலப்படுத்துவேன் என்று விஜய் எச்சரித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை, அரசியல் வட்டாரங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக எழுந்த சர்ச்சை, தஞ்சாவூர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வு ஆகியவை ஏற்கனவே பரபரப்பை உருவாக்கியிருந்த நிலையில், விஜய் அந்த விவகாரத்தை நேரடியாகத் தொட்டுப் பேசினார்.

“நடிகை த்ரிஷாவுக்கு மட்டும் அல்ல; தமிழ்நாட்டுப் பெண்கள் யாராவது ஆபாசமாகப் பேசப்பட்டாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய அவர், உதயநிதியை ‘ஆபாசநிதி’ என்று குறிப்பிட்டுத் தாக்கியது பலரையும் திகைக்க வைத்தது. இது த்ரிஷாவுக்கு எதிரான இரட்டை அர்த்தப் பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பேச்சுகள் இடம்பெறாமல் இருக்க எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

https://x.com/Roja20Angel/status/2096818679505678474?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2096818679505678474%7Ctwgr%5E8199e5c6f32bda85c598a37e29759b0c0aea5e5b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Fvijays-thalapathy-hashtag-trending-nationwide-after-he-slams-udhayanidhi-over-abusive-comments-183781.html

இதற்கு முன் உதயநிதி ஸ்டாலின், விஜயை ‘பேசாத பொம்மை முதல்வர்’ என்றும், அவரது அரசை ‘சோபா மாடல் அரசு’ என்றும், ஆட்சியைப் பிடிக்க குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியான பதிலாக, விஜய் சட்டசபையில் கருணாநிதி, மு.க. ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட திமுகத் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை பல ஆண்டுகளாகப் பதிவு செய்துள்ள ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை வரிசைப்படுத்திப் பேசினார். 

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து..! விவசாயிகள், ஆசிரியர்களுக்கு ரிலீஃப்... முதல்வர் விஜய் அதிரடி..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடந்த அவமானத்தையும் நினைவுபடுத்தினார்.“பவழ விழா பா…” என்று தொடங்கி, உடனே நிறுத்தி “அதை விடுங்க… பவழ விழா கட்சி” என்று சொல்லி, திமுகவின் 50 ஆண்டுகால ஆட்சி முறைகேடுகளைத் தோண்டி எடுப்பேன் என்று எச்சரித்தார். இந்த வரிகள் சட்டசபையிலேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

https://x.com/dmk_youthwing/status/2096828157588566195?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2096828157588566195%7Ctwgr%5E8199e5c6f32bda85c598a37e29759b0c0aea5e5b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Fvijays-thalapathy-hashtag-trending-nationwide-after-he-slams-udhayanidhi-over-abusive-comments-183781.html

சமூக ஊடகங்களில் #Thalapathy ஹேஷ்டேக் வேகமாக டிரெண்டாகியது. தவெக ஆதரவாளர்கள், “சும்மாவே காட்டுக்காட்டுன்னு காட்டுவேன்” என்ற ராஜ்மோகன் வசனத்தை நினைவுகூர்ந்து, விஜய் அமலாக்கத்துறை ஆதாரங்களை முன்வைத்ததைப் பாராட்டினர். அதேநேரம் திமுக ஆதரவாளர்கள் #TVKVijayFails என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

https://x.com/Viberraja/status/2096829451032305939?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2096829451032305939%7Ctwgr%5E8199e5c6f32bda85c598a37e29759b0c0aea5e5b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Fvijays-thalapathy-hashtag-trending-nationwide-after-he-slams-udhayanidhi-over-abusive-comments-183781.html

விஜயின் உரை ரீல்களாக வெட்டப்பட்டு இந்தியா முழுவதும் பரவி வருகிறது.தவெக கட்சியைத் தொடங்கி முதலமைச்சர் பதவிக்கு வந்த விஜய், இன்று சட்டசபையில் தன் அரசியல் பாணியைத் தெளிவாகக் காட்டியுள்ளார். பெண்கள் மரியாதை, ஊழல் எதிர்ப்பு ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை மையப்படுத்தி அவர் பேசியது, எதிர்கால அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு..! நல்ல செய்தி வரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share