×
 

இது முதல் முறை அல்ல... மூதாட்டியைக் கூட விட்டு வைக்காத காமுகன்... தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள்...!!

2020 ஆம் ஆண்டு எட்டையாபுரம் அருகே மூதாட்டி ஒருவரை கற்பழித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி வேடநத்தம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை கைது செய்யப்பட்டுள்ள மாவீரன் என்ற தர்ம முனிஸ்வரன் மீது ஏற்கனவே மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது 


தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த பத்தாம் தேதி இரவு தனது வீட்டு அருகே காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதைக்காக சென்று நிலையில் அவர் வீடு திரும்பாமல் காணாமல் போனார் 

இதைத் தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் வேடநத்தம் கிராமம் முழுவதும் மாணவியை தேடினர் ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை இதைத் தொடர்ந்து  மாணவியின் பெற்றோர் குளத்தூர் காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளனர் குளத்தூர் காவல் நிலைய போலீசார் அவர்களது புகாரை வாங்காமல் நீங்கள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்க கூறியுள்ளனர் 

இதையும் படிங்க: அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!

இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர் அப்போது அங்கே இருந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா புகாரை முறையாக விசாரிக்காமல் மாணவியின் நடத்தை குறித்து தவறாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது 

தொடர்ந்து கடந்த பதினொன்றாம் தேதி மாலை காட்டுப் பகுதியில் மாணவி உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர் மேலும் தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன 

கடந்த எட்டு நாட்களாக இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் காவல்துறை திணறி வந்தது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாணவியின் உறவினர்கள் வட மாநில தொழிலாளிகள் மற்றும் மாணவியின் உடன்படித்தவர்கள் என பல்வேறு தரப்பிடம் விசாரணை நடைபெற்றது மேலும் வீடு வீடாகவும் விசாரணை மேற்கொண்டனர் இந்த விசாரணை அடிப்படையில் 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது 

இந்த நிலையில் மாணவி உடல் உடற்கூறாய்வு முடிவில் மாணவி பின்னந்தலையில் காயம் மற்றும் கழுத்து எலும்பு உடைந்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது 

இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஒன்பதாவது நாளாக இன்று வரை மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவியரின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேடநத்தம் கிராம சம்பவம் நடந்த காட்டுப்பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்தனர் அதில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் கடந்த பத்தாம் தேதி மாலை 5:21 மணிக்கு காட்டுப்பகுதி நோக்கி செல்வது தெரியவந்தது

இதைத் தொடர்ந்து அந்த இருசக்கர வாகனத்தின் என்னை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் இதில் அந்த இருசக்கர வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதில் அந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் என்பது தெரியவந்தது 

இதை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தனிப்படை காவல்துறையினர் தற்போது மாணவியை கொலை செய்த மாவீரன் என்ற  தர்ம முனீஸ்வரனை இன்று தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்திற்கு கையெழுத்து போடுவதற்காக வந்த நிலையில் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இதில் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன 12வகுப்பு பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் கடந்த 2020 ஆம் ஆண்டு எட்டையாபுரம் அருகே மூதாட்டி ஒருவரை கற்பழித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி அருகேயுள்ள கீழ ஈரால் ஆர்.சி தெரு புது காலனி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி பாப்பா(65). கடந்த 02.02.2020 அன்று  பாப்பா தங்களது விவசாய நிலத்திற்கு சென்ற போது கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

 இந்த கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகள் குற்றவாளி கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்த நிலையில் ரெண்டு ஆண்டுகள் கழித்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள மாவீரன் என்ற தர்ம முனிஸ்வரனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மூதாட்டியை கற்பழித்து கொலை செய்து நகை திருடியதை ஒப்புக்கொண்டார்

இந்த வழக்கில் தர்ம முனிஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஜாமினில் வெளியே வந்து சுற்றி திரிந்துள்ளார் மேலும் இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது 

தற்போது இதுபோன்ற தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்காமல் விட்டதன் காரணமாக காவல்துறையின் அலட்சியம் காரணமாக. தற்போது மீண்டும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை கஞ்சா மது போதையில் எப்போதும் இருக்கும் மாவீரன் என்ற தர்ம முனிஸ்வரன் மாணவியை தூக்கிச் சென்று கொடூரமாக கற்பழித்து உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்படுத்தி தலை மற்றும் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை துயரத்தை ஏற்படுத்தி உள்ளது 

மேலும் இந்த வழக்கில் மாவீரன் என்ற தர்ம முனிஸ்வரனுக்கு மட்டும் தொடர்பு உள்ளதா வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ஆஜர் படுத்தப்பட்ட பின்பு தாங்கள் மாணவியின் உடலை வாங்கிக் கொள்வதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

இதையும் படிங்க: விளாத்திகுளம் சிறுமி படுகொலை! 98 சிசிடிவி, 2574 அழைப்புகள் ஆய்வு - எஸ்.பி. மதன் அதிரடி விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share