#BREAKING: “தர்ம முனிஸ்வரன் தான் குற்றவாளி”..!! விளாத்திகுளம் மாணவி கொடூர கொலை வழக்கில் தீர்ப்பு..!
விளாத்திகுளம் மாணவி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய கொடூர சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் நடைபெற்றது. கடந்த மார்ச் 10, 2026 அன்று மாலை, பிளஸ் டூ பொதுத் தேர்வை நல்ல முறையில் எழுதி முடித்த 17 வயது மாணவி, இயற்கை உபாதை கழிக்க அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றபோது, கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பின்னர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
மறுநாள் காலையில் அவளது சடலம் குமாரபுரம் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சடலத்தைப் பெற மறுத்து தொடர் போராட்டம் நடத்தினர்.
காவல்துறை இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு 10 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தியது. 98 CCTV காட்சிகள், செல்போன் சிக்னல்கள் உள்ளிட்ட அறிவியல் பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆதாரங்கள் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த 38 வயது தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு ஷாக்..! சுப்ரீம்கோர்ட் கர்நாடகாவுக்கு சாதகம்!”
பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என தூத்துக்குடி போக்கு சொன்ன நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. வழக்கில் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கான தண்டனை விவரம் மதியம் 12:30 மணிக்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!