×
 

விழுப்புரத்தில் அதிர்ச்சி..! மாற்றுத்திறனாளி மகனை கொல்ல முயன்ற பெற்றோர்..! தீவிர சிகிச்சை..!!

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையை பராமரிக்க முடியாமல் பெற்றோர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரத்தில் நான்கு வயது மாற்றுத்திறனாளி குழந்தையை பராமரிக்க முடியாமல் விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெற்றோரால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், எதப்பட்டு மதுரா கரடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெரியதம்பி - கலையரசி ஆகிய தம்பதிக்கு யோகேஸ்வரன் (வயது 4),மோனிஷ் ராஜ் (வயது 2) என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இதில் மூத்த பிள்ளையான செல்வன். யோகேஸ்வரன் என்பவர் மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார். யோகேஸ்வரன் படுத்தபடுக்கையாக அவதிப்பட்டு வந்த காரணத்தினாலும், அவரை பராமரிக்க முடியாத சூழ்நிலையினாலும், அவரது பெற்றோர் அவருக்கு பூச்சிக்கொல்லி மருந்தினை அளித்துள்ளதாக தெரிய வருகிறது.

 இதனைத் தொடர்ந்து, மேற்படி சிறுவன் பூச்சி கொல்லி மருந்து உட்கொண்டதால் வாந்தி எடுப்பதை பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக அச்சிறுவனை அவலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூர் 2.0க்கு தயாராகும் இந்தியா! அடுத்தக்கட்ட போருக்கு ரெடி! ராணுவ தளபதி உபேந்திர திவேதி அதிரடி!

 தற்போது அந்த மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக அவலூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி குழந்தையை பராமரிக்க முடியாமல் பூச்சி மருந்து கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் கரடிகுப்பம் சுற்றுவட்டார கிராம பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: "தயங்காதிங்க"..! உதவ நான் இருக்கேன்..! மயிலம் மக்களுக்கு நன்றி சொன்ன C.V. சண்முகம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share