இனிமே கோரிக்கை வெச்சு நான் என்ன பண்ண போறேன்? என் பையனே போயிட்டான்.. கதறிய தாய்..!
விழுப்புரத்தில் பள்ளி வகுப்பறையில் 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில், அவரது தாய் கதறி துடித்தது காண்போரை கலங்கச் செய்தது.
விழுப்புரம் மாவட்டம் திரு வி கா வீதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மோகன்ராஜ் என்ற மாணவர் 11 ஆம் வகுப்பு பயன்று வந்தார். இந்த நிலையில் திடீரென வகுப்பறையில் மாணவன் மோகன்ராஜ் மயங்கி விழுந்து உள்ளார்.
இதனைப் பார்த்து ஓடிச் சென்று ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மோகன்ராஜ்க்கு என்ன ஆனது என பார்த்துள்ளனர். தொடர்ந்து மாணவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் ஏன் மயங்கி விழுந்தான், அவன் ஏற்கனவே ஏதேனும் உடல்நலப் பிரச்சனையுடன் இருந்தானா போன்ற விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். எந்த நிலையில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: செப்.3ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!!
தனது மகன் உயிரிழந்த சம்பவத்தை கதறி அழுதவாறு தாய் விவரித்தது காண்போரை கலங்க செய்கிறது. காலை 7:00 மணிக்கு வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பியதாகவும் 7 15 மணிக்கு எல்லாம் உங்கள் மகன் மயங்கி விழுந்து விட்டார் என தகவல் வந்ததாகவும் கூறினார். உடனடியாக வந்து பார்த்தபோது தனது மகனை கீழே படுக்க வைத்து கை கால்களை தேய்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
நிறைய புத்தகங்களை நான்கு மாடிக்கு தூக்கிச் சென்றதால் மூச்சு திணறி இருக்கும் என்றும் தனது மகனுக்கு எந்தவிதமான உடல் உபாதையும் இல்லை என்றும் அவரது தாய் தெரிவித்தார்.
தனது மகன் நன்றாக படிப்பார் என்று கூறிய தாய் பத்தாம் வகுப்பில் 452 மதிப்பெண் எடுத்திருந்தார் என்றும் படிப்பில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தாய் தெரிவித்தார்.
மேலும், தன் மகனை போய்விட்டார் இனிமேல் கோரிக்கை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன் என்று அவர் துடித்து அழுதது சோகத்தை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: மாநில கல்விக் கொள்கை சொல்வது என்ன? முக்கிய அம்சங்களின் முழு விவரம்...