3 மாத உழைப்பு; பல லட்சம் செலவழிப்பு... தடபுடலாக தயாராகும் பிரம்மாண்ட ‘புஷ்பா 2’ விநாயகர்...!
புஷ்பா2 விநாயகர்: 3 மாதங்களாக சினிமா செட் அமைப்பவர்கள் மூலம் தயாராகி வருகிறது
ஒசூர் அருகே புஷ்பா- 2 திரைப்பட கிளைமாக்ஸ் காட்சிகளை போன்று பல லட்சம் ரூபாய் பொருட் செலவில் தயாராகி வரும் புஷ்பா2 விநாயகர்: 3 மாதங்களாக சினிமா செட் அமைப்பவர்கள் மூலம் தயாராகி வருகிறது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பல யோசனைகள் மூலம் விநாயகர் சிலைகள் பெரும் செலவில் அமைத்து பக்தர்களின் கவனத்தை பெறுவதுடன், பல்வேறு பகுதிகளிலிருந்தும் விநாயகர் சிலைகளை காண குவிய தொடங்குவார்கள்.. பின்னர் வெகு விமர்சையாக ஊர்வலங்கள் நடைப்பெறும்.
குறிப்பாக ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ராஜா மார்தாண்ட பக்த மண்டலியினர் வித்தியாசமாக யோசித்து விநாயகர் சிலைகளை அமைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு... திமுகவுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுக்கப்போகும் விஜய்... அதிரும் அறிவாலயம்...!
38 ஆண்டாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கடந்த ஆண்டுகளில் பாகுபலி விநாயகர், அத்திவரத விநாயகர், கேஜிஎப், காந்தாரா, கல்கி என விதவிதமாக வடிவமைத்து பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இந்திய அளவில் பல கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த படமான புஷ்பா-2 படத்தை மையமாக கொண்டு இந்தாண்டு புஷ்பா- 2 திரைப்பாட கிளைமாக்ஸ் காட்சிகளை கண்முன் நிறுத்தும் வகையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது.
சினிமா திரைப்பட செட் அமைக்கும் வல்லுநர்களை கொண்டு பல லட்சம் ரூபாய் பொருட்செலவில் கடந்த மூன்று மாதங்களாக இந்த பணிகள் நடந்து வருகிறது. அத்திரைப்படத்தில் வரும் ஹெலிகாப்டரை போன்று, நிஜ எலிகாப்டரை வண்ணம் தீட்டி நிறுவி உள்ளனர்.. செம்மர கட்டைகளை கடத்துவது புஷ்பா படத்தின் கருவாக உள்ளநிலையில் செம்மர கட்டைகளை அடுக்கி வைத்தும், கோட்டையை போல பிரம்மாண்ட செட் தயாராகி வருகிறது..
அல்லு அர்ஜுன் நீல நிற புடவையில் பெண் வேடம் போல இருப்பதை காட்டும் வகையில் விநாயகர் சிலை பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட உள்ளது. இந்த செட்டை அமைக்க பெங்களுருவிலிருந்து சினிமா செட் அமைக்கும் கலைஞர்கள் வர வழைக்கப்பட்டு பணிகள் நடந்து வரும்நிலையில், பொதுமக்களை அதிகம் கவரும் என்பதில் சந்தேகமில்லை....
இதையும் படிங்க: INS உதயகிரி, INS ஹிமகிரி.. இந்திய கடற்படையின் புதிய மைல்கல்.. நாட்டிற்கு இன்று அர்ப்பணிப்பு..!!