தேதி குறிச்சாச்சு... திமுகவுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுக்கப்போகும் விஜய்... அதிரும் அறிவாலயம்...!
திமுகவுடைய முப்பெரும் விழா மாநாட்டு நாள் அன்னைக்கு விஜய் ஒரு ஷாக் கொடுக்க போறாராம்.
தேர்தல் வரைக்கும் திமுகவை எதிர்த்து எப்படி அரசியல் செய்யறதுன்னு சில முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறாராம் விஜய். விஜய்க்கு எதிரா திமுக எடுத்த சில அரசியல் அஸ்திரங்களை இப்ப அதே பாணியில திமுகவுக்கு எதிரா விஜய் எடுக்க போறாராம்.
கரூரில் அடுத்த மாதம் 17 ஆம் தேதி திமுக முப்பெரும் விழா நடக்கப்போகிறது. தேர்தலுக்கு முன்னதாக நடக்கப்போற விழா, அதுவும் குறிப்பா கொங்கு மண்டலத்தில் நடக்கப்போகிறது. இதனால் திமுக ரொம்ப கவனம் செலுத்தி வருகிறது. கிட்டத்தட்ட திமுகவோட 2026 பிரச்சார துவக்க மேடையாவும் கரூர் முப்பெரும் விழா இருக்கும்னு சொல்றாங்க.
அதே நாள்ல விஜயும் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க துவங்கி இருக்காரு. ஏற்கனவே அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவை தமிழ்நாடு முழுக்க பேச வச்ச விஜய் வரும் 17ஆம் தேதி பெரியார் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தேதி கொடுத்திருக்காரு. அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட்ட நிறுவனமே பெரியார் புத்தகத்தையும் வெளியிட போகுது. இதுல பெரியார் புத்தகத்தை விஜய் வெளியிட வாங்க போறது யாருங்கிறதுதான் இப்போ சஸ்பென்ஸ். அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வெளியிட திருமாவளவன் வாங்கிக்கிறதா அப்போ பேசப்பட்டுச்சு. ஆனா திருமா வரல.
இதையும் படிங்க: தொண்டர்களை தூக்கி வீசிய விஜய் பவுன்சர்கள்... நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார்..!
அம்பேத்கரோட பேரன் புத்தகத்தை வாங்கிக்கிட்டாரு. பெரியார் புத்தகத்தை விஜய் கிட்ட வாங்க போறவரை விஜய் தரப்பு தேடிக்கிட்டு இருக்காம். இந்த புத்தக வெளியீட்டு விழாவில திமுகவுக்கு எதிரான விஜயோட விமர்சனங்கள் கடுமையா இருக்கும்னு எதிர்பார்க்கிறாங்க. மதுரை மாநாட்டை விட டபுள் மடங்கு விமர்சனங்களை திமுக மீது வைக்கவுள்ளாரம். ஏற்கனவே மதுரை மாநாட்டில் “வாட் அங்கிள், தி இஸ் வெரி ராங் ஆங்கிள்” என ஸ்டாலின் அப்பா பிரச்சாரத்தை தவிடுபொடியாக்கிய விஜய், இந்த முறை என்ன செய்ய காத்திருக்கிறாரோ என அண்ணா அறிவாலயமே அதிர்ச்சியுடன் காத்திருக்கிறதாம்.
இதையும் படிங்க: நீங்கா நினைவில் வாழும் அண்ணன் விஜயகாந்திற்கு பிறந்தநாள்! வாழ்த்துகளை பகிர்ந்த விஜய்..!