பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!
சட்டப்பேரவை நேரலை நிறுத்தம் தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் வினோத் கருத்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சிறுபான்மை அரசை அமைத்தது. இந்தப் புதிய அரசு பொறுப்பேற்ற சில வாரங்களுக்குள், சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்பும் முடிவை எடுத்து அறிவித்தது. இது தமிழக சட்டப்பேரவையின் செயல்பாடுகளில் பெரும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இதுவரை தமிழக சட்டப்பேரவை கூட்டங்கள் பெரும்பாலும் பாரம்பரிய ஊடகங்கள் வாயிலாகவே பகிரப்பட்டன. சில முக்கிய நிகழ்வுகள் மட்டுமே தேர்ந்தெடுத்து ஒளிபரப்பப்பட்டன. ஆனால் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்தே முழு நேரலை ஒளிபரப்பு தொடங்கியது. ஆளுநர் உரை, சபாநாயகர் தேர்தல், நம்பிக்கை வாக்கெடுப்பு, விவாதங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நேரடியாக ஊடகங்கள் மூலம் ஒளிபரப்பப்பட்டன.
பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பேரவை நிகழ்வு நேரலை நிறுத்தத்திற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது நேரலை நிறுத்தப்பட்ட நிலைகள் அமைச்சர் வினோத் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விவசாய கடன் தள்ளுபடி எப்போது?... திடீரென வந்து விழுந்த அடுத்த கேள்வி திடுக்கிட்டு ஓடிய தவெக வேளாண்துறை அமைச்சர்...!
மேலும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். மழையில் நனைந்தால் நனைந்ததால் நெல் மூட்டைகள் செய்தமடைந்த நிலையில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறினார். சர்க்கரைகாலை நிலுவைத் தொகை வழங்க கோரி மூன்று ஆண்டாக போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!