×
 

கோயிலில் பெண்ணிடம் அத்துமீறல்... அரை நிர்வாணமாக ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் வீடியோ லீக்...!

பெரிய மாரியம்மன் கோவில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் அறை நிர்வான ஆபாச நடனம் மற்றும் மது போதையில் செய்யும் அட்டூழியங்களின் வீடியோ சமூக வளைதளங்களில் வெளியானதால் பரபரப்பு. 

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் வருடத்திற்க்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேற்றி கடனை செலுத்துவார்கள் மேலும் முக்கிய நாட்களில் மாதாந்த வெள்ளிகளில் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் குத்துவிளக்கு ஏற்றி குத்துவிளக்கு பூஜை நடத்துவார்கள் மேலும் இதனைத் தொடர்ந்து தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் பெரிய மாரியம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.

இந்நிலையில் இந்த கோவிலில் பெரிய மாரியம்மனுக்கு பூக்குழி திருவிழா சமயத்தில் பூஜை மற்றும் அர்ச்சனை செய்யும் கோமதிநாயாகம், வினோத், கணேசன்  உள்ளிட்ட அர்ச்சகர்கள் அறை நிர்வாணத்தில் ஆபாச நடனம் ஆடுவதும் மதுபோதையில் அட்டூழியங்கள் செய்வதும் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதும் உள்ளிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த பக்தர்கள் ஊர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒழுக்கத்தின் அடையாளமாக இருக்கும் பூசாரிகள் அர்ச்சகர்கள் கண் கூசும் செயல்களில் ஈடுபடும் போது பக்தர்கள் மன விரக்த்தி அடைந்துள்ளனர்.

அடுத்த மாதம் ஜூலை இரண்டாம் தேதி பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கும் சமயத்தில் இந்தக் கோவிலின் அர்ச்சகர்கள் செய்யும் அட்டூழியம் தற்போது வெளியான இந்த வீடியோவால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதையும் படிங்க: ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி.. ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி..!

இது குறித்து கோவில் நிர்வாக அலுவலர் ஜோதிலட்சுமியிடம் கேட்டபோது பூக்குழி திருவிழா சமயத்தில் பிரதான அர்ச்சகருக்கு உதவி செய்வதற்காக வெளியூரில் இருந்து வந்த நபர்கள் என்றும் மேலும் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நபரும் மேற்படி வீடியோவில் உள்ளதால் கும்பாபிஷேகம் நடத்தும் பொறுப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டு வேறு நபர்களிடம் கொடுத்திருப்பதாக தகவல் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: மோடி போட்ட ஸ்கெட்ச்.. சசிதரூரை கொம்பு சீவிவிட்ட பாஜக.. ட்விட்டரில் முட்டுகொடுக்கும் கார்கே!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share