×
 

விருதுநகரில் பயங்கரம்... ஒரே நேரத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து 3 பெண்கள் தற்கொலை...!

விருதுநகர் அருகே ரயில் முன் பாய்ந்து மூன்று பெண்கள் தற்கொலை 

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் ஓடும் ரயில் முன் பாய்ந்து மூன்று பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் அருகே உள்ளது பட்டம்புதூர். இங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் துண்டு துண்டாக சிதறி கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயில் முன்பு பாய்ந்து மூன்று பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் சிதறிக்கிடந்த உடலின் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் MBBS மாணவி தூக்கிட்டு தற்கொலை! திடுக்கிடும் புகாரை முன்வைத்த பெற்றோர்..!

ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் முகம் உள்ளிட்ட உடல் பாகங்கள் துண்டானதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இறந்த பெண்கள் யார்?,எதற்காக 
தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து தூத்துக்குடி இரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிக்கிய 2 பக்க கடிதம்... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலையில் திடீர் ட்விஸ்ட்... 7 பேர் மீது அதிரடி நடவடிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share