×
 

காலையிலேயே அதிர்ச்சி.. நேருக்கு நேருக்கு மோதி நொறுங்கிய லாரிகள்.. மூவர் உடல் நசுங்கி பலி..!

அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையில் கோர விபத்து - இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு ஓட்டுனர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி விலக்கு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடியில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு லாரிகளின் ஓட்டுநர்கள் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில் இருந்து பேப்பர் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ஏற்றிக்கொண்டு கண்டெயினர்‌ லாரி ஒன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக பழனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மறுபக்கம் சாலையில் பாய்ந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்த லாரி ஓட்டுனரும், சரக்கு லாரியில் இருந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளினர் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உருகுலைந்து அடையாளம் தெரியாத அளவில் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: இடிந்து விழுந்த பாலம்.. அந்தரத்தில் தொங்கிய லாரி.. குஜராத்தில் பரபரப்பு சம்பவம்..!

இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் தீயணைப்புத் துறையினர் மற்றும் கிரேன் உதவியுடன் நசுங்கி கிடந்த உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு நசுங்கிய உடலை மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல்களை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: பைக் மீது லோடு வேன் மோதிய கோர விபத்தில் பெண் பலி... பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share