×
 

விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் தான், வதந்திகள் வேண்டாம் - விஷால் ரசிகர் மன்றம்

உடல்நிலை பாதிக்கப்பட்ட விஷால் குறித்து யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று விஷால் ரசிகர் மன்றத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடிகர் விஷால் குறித்தும் அவருடைய உடல்நிலை குறித்தும் பல்வேறு தகவல்கள் சமூகவலைத் தளங்களில் பரவி வரும் நிலையில், இன்று அவருடைய மருத்துவ அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில் அவருக்கு வைரஸ் காய்ச்சலுக்கான சிகிச்சையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், வேறு எந்தவொரு உடல் பிரச்சினையும் அவருக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மதகஜராஜா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகன் விஷால் கலந்து கொண்ட விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் மைக்கை கூட பிடித்து பேச முடியாமல் கைகள் தடுமாற்றம் அடைந்து காணப்பட்டார்.

நடிகர் விஷாலின் உடல்நிலை பாதிப்பு என்பது தகாத பழக்க வழக்கத்தால் ஏற்பட்ட பின்விளைவு என்று ஒரு தரப்பினர் கூறி வந்த நிலையில், 'அவன் இவன்' படத்துக்காக ஸ்குவின்ட் ஐஸ் காட்சிகளுக்கு எடுத்துக் கொண்ட விடா முயற்சியின் பின் விளைவு தான் என்று மற்றோருத் தரப்பினர் கூறினர். மேலும், தன் முன்னாள் பிரபல காதலியின் பிரிவு அவரை மனோ ரீதியிலான துயரத்தில் ஆழ்த்தி விட்டதன் எதிரொலி தான் என்றும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: தரம் உயர்த்தப்பட்டும் "நோ யூஸ்"..அரசு மருத்துவமனையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து, அவருடைய உதவியாளர் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை வெளியாகி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்நிலையில் தான் அவருடைய ரசிகர்களும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இதையும் படிங்க: "எனக்கு தோல்வி பயம் இல்லை : புது டெல்லியில் மட்டுமே போட்டி" ; பாஜகவுக்கு கெஜ்ரிவால் பதிலடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share