V.S. பாபு குறித்து முக்கிய அப்டேட்.! உடல்நிலை எப்படி இருக்கு..? அமைச்சர் மரிய வில்சன் பேட்டி..!!
MLA வி எஸ் பாபு நலமுடன் உள்ளதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாசப் பிரச்சினை காரணமாக அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழுவின் தொடர் கண்காணிப்பில் அவர் இருக்கிறார். தேவையான சுவாச ஆதரவு உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.வி.எஸ். பாபுவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற பின்னர் உடல்நிலை சரியில்லாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
75 வயதான அவர் தற்போது கிரிட்டிக்கல் கேர் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவரது நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். உடல்நிலை சீராக இருந்தாலும் தொடர் கண்காணிப்பு அவசியம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "ஆஜராகிறேன்"..! இளவரசரா என்று விளாசிய கோர்ட்..! அமைச்சர் மரிய வில்சன் உடனடி பதில்..!
சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ் பாபு நலமுடன் உள்ளார் என்று அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார் என்றும் கூறியுள்ளார். தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கைகள் சாதகமாக உள்ளன. சுவாசப் பிரச்சினைக்கு ஏற்ற சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?... நிதி அமைச்சர் மனுவால் டென்ஷன் ஆன நீதிபதி... காரணம் என்ன?