மன நிறைவா இருக்கோம்! திமுக கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சி பேட்டி!
தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்ட கால தொகுதி பங்கீடு விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இன்று அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கானத் தொகுதிப் பங்கீடு இன்று சுமுகமாக நிறைவுபெற்றது. 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) இடத்தை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் உற்சாகத்துடன் பேசினார்.
திமுக உடனானத் தொகுதிப் பங்கீடு எங்களுக்கு முழு மன நிறைவைத் தந்துள்ளதது. நாங்கள் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்" எனச் செல்வப்பெருந்தகை தனது முதல் உணர்வைப் பதிவு செய்தார். சரியான நேரத்தில், ஒரு சரியான முடிவை அகில இந்திய காங்கிரஸ் தலைமையும், திமுக தலைமையும் எடுத்துள்ளனர். இது வெறும் சீட் பங்கீடு மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்காலத்திற்கானக் கூட்டணி" எனத் தெரிவித்தார்.
கடந்த முறையை விடக் கூடுதல் தொகுதிகளுடன் (28), மாநிலங்களவை இடத்தையும் திமுக வழங்கியுள்ளதால், தொண்டர்கள் இரட்டிப்பு உற்சாகத்துடன் தேர்தல் பணிகளைத் தொடங்குவார்கள் என்றும், 2026-லும் இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேமுதிக, காங்கிரஸ் என அடுத்தடுத்துக் கூட்டணி கட்சிகளுக்கானப் பங்கீடுகளைத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சுமுகமாக முடித்து வருவது, கூட்டணியின் ஒற்றுமையைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு! திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு!
இந்த ஒப்பந்தத்தின்படி, காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் விரைவில் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.
இதையும் படிங்க: தேமுதிகவிற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு! மு.க. ஸ்டாலின் - எல்.கே. சுதீஷ் ஒப்பந்தம்!