இதோ வந்துட்டான்ல... வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழை
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா ஒடிசா கடற்கரையிலிருந்து வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 19 அன்று அதிகாலை தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திரப் பிரதேச பகுதியில் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை ஒரே இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் 7 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிகத் தீவிரமாக உள்ள பருவ மழை... வெளுத்து வாங்க போகுது! உஷார் மக்களே..!
மேலும், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிரிச்சு நவுத்த போகுது மழை... காற்றழுத்த தாழ்வு நிலையால் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?