×
 

வெளுக்க போகுது. ! கனமழை எச்சரிக்கை... லிஸ்ட்ல சென்னையும் இருக்கு... முழு விவரம்..!

கனமழை எச்சரிக்கை தொடர்பான வானிலை மையத்தின் தகவலை பார்க்கலாம்.

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு 710 km தொலைவிலும் காரைக்காலுக்கு 540 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பத்தாம் தேதி இலங்கையின் யாழ்ப்பாணம் திரிகோணமலை இடையே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம், மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் நாளை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பதினொன்றாம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சும்மா வெளுக்கபோகுது... காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றதாக அறிவிப்பு...!

திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் 11ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் நாளை மறுநாளும் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாகை, கடலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைந்துள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தலா மூன்று குழுக்களாக விரைந்துள்ளனர். 

இதையும் படிங்க: புத்தாண்டை வரவேற்ற மழை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share