×
 

18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் வேலூர், கோவை, நெல்லை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நீடித்து வரும் வேளையில், தற்பொழுது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடிக்கவுள்ள இந்த வானிலை மாற்றம் குறித்துச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அறிக்கையின்படி, வட தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் மழையின் வேகம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் ஜூன் 2 மற்றும் ஜூன் 3 ஆகிய தேதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: 2 நாட்கள் அடித்து ஊற்றக் காத்திருக்கும் கனமழை! நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திடீரெனத் தோன்றும் இந்த இடி மின்னல் தாக்கங்களின் போது பொதுமக்கள் யாரும் திறந்தவெளிகளிலோ அல்லது மரங்களின் அடியிலோ தஞ்சமடைய வேண்டாம் என்றும், மின்சாதனப் பொருட்களைக் கையாளும் போது தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

மேலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் மலைப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share