சென்னையில் வெளுத்து வாங்கும் மழை... வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு...!
சென்னையின் பல்வேறு இடங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
வங்கக் கடலில் வரும் 22 ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்தம் வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்க கடலில் உருவாகும் காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வலுவடையும் என்றும் தெரிவித்தது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை எழும்பூர், புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. என்ற நிலையில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்தது.
நெல்லை மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நாலையும் நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வரும் 22ஆம் தேதி கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டது.
சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இரவு ஏழு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இரவு ஏழு மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... சென்னைக்கும் வார்னிங்...!
சேலம், தென்காசி, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. மயிலாப்பூர், அடையாறு, மந்தவெளி, பட்டினப்பாக்கம், காமராஜர் சாலை, எழும்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கப் போகுது... 14 மாவட்டங்களில் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை...!