×
 

மக்களே உஷார்... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... சென்னைக்கும் வார்னிங்...!

சென்னையில் இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம். தூத்துக்குடி, நெல்லை. குமரியில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெளுத்து வாங்கப் போகுது... 14 மாவட்டங்களில் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை...!

சிவகங்கை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மறுநாள் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறையில் 21ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: வெளுக்க போகுதாம் மழை... 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... சென்னைக்கும் எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share