×
 

புயல் வருதாம்... மக்களே உஷார்..! முக்கிய தகவல் கொடுத்த இந்திய வானிலை ஆய்வு...!

நவம்பர் 26 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கும் சூழலில், அதேபோல் இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. சமீப நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் சற்று மழை பொழிவு அதிகமாக இருந்தாலும் இடையில் மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. மோன்தா புயல் உருவாக்கிய போது பெய்த மழை படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

இதையும் படிங்க: சுழற்றி அடிக்க போகுது... வங்கக்கடலில் காற்றழுத்த பகுதி... இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!

அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் புயலாகவும் வலுவடைய கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அடிச்சு நகர்த்த போகுது... 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... உஷார் மக்களே...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share