×
 

அடிச்சு நகர்த்த போகுது... 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... உஷார் மக்களே...!

வானிலை ஆய்வு மையத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விவரங்களை பார்ப்போம்.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைய தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 25ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 22, 23 ஆகிய தேதிகளில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் வெளுத்து வாங்கும் மழை... வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு...!

மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் 24 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 25 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்களே உஷார்... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... சென்னைக்கும் வார்னிங்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share