#BREAKING கண் திறந்த ‘அர்னாப்’ புயல்... நாளை கரையைக் கடக்கும் முன்பு காத்திருக்கும் கோரதாண்டவம்... எங்கு தெரியுமா?
நேற்று காலை 5.30 மணிக்கு உருவான இந்தப் புயல், மாலைக்குள் தீவிரப் புயலாகவும், இரவு 11.30 மணிக்கு மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெற்றுள்ளது.
மசூலிப்பட்டினத்திற்குக் கிழக்கே 280 கிலோமீட்டர் தொலைவில் அர்னாப் புயல் மையம் கொண்டுள்ளது. நேற்று காலை 5.30 மணிக்கு உருவான இந்தப் புயல், மாலைக்குள் தீவிரப் புயலாகவும், இரவு 11.30 மணிக்கு மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெற்றுள்ளது. 18 மணி நேரத்தில் அடுத்தடுத்து தீவிரமடைந்து வரும் அர்னாப் புயல் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ள தகவல்கள் குறித்து பார்க்கலாம்...
தமிழகத்தைப் பொறுத்தவரையில், அர்னாப் புயலால் நேரடித் தாக்கமோ பாதிப்போ எதுவும் இருக்காது. இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். இருப்பினும், கடலில் கொந்தளிப்பும் சீற்றமும் அதிகமாக இருக்கும். எனவே, பொதுமக்கள் கடற்கரையில் இறங்குவதையும், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
மறுபுறம், அர்னாப் புயலைப் பொறுத்தவரையில், நேற்று காலை புயலாக உருவானதிலிருந்து தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. எதிர்பார்த்ததைவிட வேகமாக வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக, நீங்கள் குறிப்பிட்டதைப் போல, 18 மணி நேரத்தில் தீவிரப் புயல், மிகத் தீவிரப் புயல் என அடுத்தடுத்த நிலைகளை அடைந்துள்ளது.
இதையும் படிங்க: திக்...! திக்...!! நெருங்கும் ஆபத்து... அதிதீவிரப் புயலானது ‘அர்னாப்’... எங்கெல்லாம் ரெட் அலர்ட்.?
அதுமட்டுமின்றி, தற்போது புயலின் கண் பகுதியும் உருவாகத் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்குள் கண் பகுதி உருவாகியிருப்பது, புயல் மிக வேகமாகத் தீவிரமடைந்து வருவதைக் காட்டுகிறது.
இந்தச் சூழலில், நாளை அக்டோபர் 28ஆம் தேதி காலை நேரத்தில் மசூலிப்பட்டினத்திற்கும் விசாகப்பட்டினத்திற்கும் இடையே, காக்கிநாடா அருகே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 18 மணி நேரத்தில் இந்தப் புயல் மேலும் தீவிரமடைவதற்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. அவ்வாறு தீவிரமடைந்தால், அது அதிதீவிரப் புயலாக மாறும். அதாவது, சூப்பர் புயலுக்கு ஒரு நிலை குறைவான தீவிரத்தை அடைவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், புயல் பயணிக்கும் பாதையில் உள்ள கடலின் வெப்பநிலை, காற்று முறிவு உள்ளிட்ட அனைத்துக் காரணிகளும் புயல் வலுப்பெறுவதற்குச் சாதகமாக உள்ளன. இதன் காரணமாக, இந்தப் புயலைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்திய ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் அடுத்தடுத்த மணி நேரங்களில் படிப்படியாக மழை தொடங்கி, இரவு நேரத்தில் தீவிரமடையும் என எதிர்பார்க்கலாம். காற்றின் வேகமும் படிப்படியாக அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார் அன்பில் மகேஷ்... கைது, ஜாமீன் மறுக்கப்பட்டதற்கு பின்னால் இருக்கும் உண்மை இதுதான்...!