திக்...! திக்...!! நெருங்கும் ஆபத்து... அதிதீவிரப் புயலானது ‘அர்னாப்’... எங்கெல்லாம் ரெட் அலர்ட்.?
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் தீவிரப் புயல், 27ஆம் தேதி மாலை ஆந்திரக் கரையைக் கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல், நேற்று இரவே அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இந்தப் புயல் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தப் புயல் நிலைகொண்டுள்ளது.
குறிப்பாக, இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 360 கிலோமீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து தெற்கே 380 கிலோமீட்டர் தொலைவிலும் இந்தப் புயல் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING நள்ளிரவு தேனியில் நடந்த பயங்கரம்... விடிந்ததுமே கொத்து, கொத்தாய் கைதாகும் கைதிகள்... சிக்கியது எப்படி?
மேலும், மசூலிப்பட்டினத்திலிருந்து கிழக்கே 460 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிலிருந்து 530 கிலோமீட்டர் தொலைவிலும் இந்தப் புயல் மையம் கொண்டுள்ளது.
குறிப்பாக, இந்தப் புயலின் நகரும் வேகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த புயல், அதன்பிறகு மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. தற்போது அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், அதன் நகரும் வேகமும் அதிகரித்து மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி இந்தப் புயல் மிக வேகமாக நெருங்கி வருகிறது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு வெளியான அறிக்கையின்படி, விசாகப்பட்டினத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில்தான் இந்தப் புயல் இருந்தது. தற்போதைய நிலவரப்படி, புயல் மேலும் ஆந்திரக் கடற்கரையை நெருங்கியிருக்கக்கூடும்.
இன்னும் சிறிது நேரத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் காலை 8 மணி நிலவரத்துக்கான அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையில் புயலின் தற்போதைய நிலை குறித்த கூடுதல் விவரங்கள் தெரியவரும்.
இதற்கிடையே, இந்தப் புயல் இன்று மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரும் என்றும், அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 28ஆம் தேதி முற்பகலில் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இதே வேகத்தில் புயல் நகரும் பட்சத்தில், ஏற்கெனவே கணிக்கப்பட்ட நேரத்தைவிட முன்னதாகவே கரையை அடையக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இதற்கிடையே, புயல் வேகமாகக் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
இதையும் படிங்க: #BREAKING நாளை முதல் அதிரடி மாற்றம்... ஆவின் பால் பொருட்கள் விலை தடாலடி உயர்வு...!