×
 

வங்காள மொழியா? வங்கதேச மொழியா? மம்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல்வர்..!

தேசிய கீதம் எழுதப்பட்ட வங்க மொழி அவமதிப்பு செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

டெல்லி காவல்துறை தரப்பில் வெளியான கடிதம் ஒன்றில், அடையாள ஆவணங்களில் வங்காளதேச மொழியில் எழுதப்பட்ட உரைகள் உள்ளன. மேலும் அவை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

இப்போது, விசாரணை மேலும் தொடர, மேற்கூறிய நோக்கத்திற்காக வங்காளதேச தேசிய மொழியில் தேர்ச்சி பெற்ற ஒரு அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளர்,மொழிபெயர்ப்பாளரை தயவுசெய்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வங்காள மொழியை வங்கதேச மொழி என்று காவல்துறை குறிப்பிட்டதற்கு கண்டனம் எழுந்தது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை "வங்காளதேச" மொழி என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: நலம் காக்கும் ஸ்டாலின் வெற்று விளம்பரமா? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க! சுகாதாரத்துறை ரிப்போர்ட்..!

இதனை சுட்டிக்காட்டிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இது அவதூறான, அவமதிக்கும், தேச விரோத, அரசியலமைப்பிற்கு விரோதமான செயல் என்று கண்டனம் தெரிவித்தார். இந்த நடவடிக்கை இந்தியாவின் அனைத்து வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கும் செயல் என்றும் கூறியிருந்தார். 

இந்த நிலையில், வங்க மொழியை வங்கதேச மொழி என டெல்லி போலீசார் குறிப்பிடதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய கீதம் எழுதப்பட்ட வங்கமொழியை உள்துறை அமைச்சகம் அவமதிப்பதாக குற்றம் சாட்டினார்.

இது தவறுதலாக நிகழ்ந்த பிழைகள் அல்ல என்றும் ஆட்சியாளர்களின் இருண்ட மனநிலை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஹிந்தி மொழிகள் ஹிந்தி அல்லாத மொழிகள் மீதான மத்திய அரசின் தொடர் தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது என்றும் வங்க மொழிக்கும் மக்களுக்கும் ஆதரவாக மம்தா பானர்ஜி இருப்பதாகவும் கூறி முதல்வர் ஸ்டாலின் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அடேங்கப்பா… இது நம்ப லிஸ்டிலேயே இல்லையே! திமுகவுக்கு தாவும் ஜெயக்குமார்? அரசியலில் பரபரப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share