×
 

தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25,000 சம்பளம் தர முடியாதா? உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி கேள்வி!  

தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ 25000 ஊதியம் ஏன் தர முடியாது என உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளருக்கு மாதம் ரூ.25,000 சம்பளம் தர வேண்டும் என நினைக்கும் தமிழக முதலமைச்சரால், இரவுபகலாக உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.25,000 ஏன் வழங்க முடியாது? என்று உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் புதிய கார்கள் வழங்குவது மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில், அடித்தட்டுத் தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சினை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி, அரசு நிர்வாகத்தின் முன்னுரிமைகளைக் கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: அறநிலையத்துறையை வேவு பார்க்கிறார் சேகர்பாபு! அமைச்சர் ரமேஷ் அதிரடி குற்றச்சாட்டு!

அப்போது பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களால் கார் வாங்க இயலாமல் ஆட்டோவில் வருகிறோம் என்று சொன்னதைக் கேட்டு அரசு உடனடியாகக் கரிசனப்பட்டுப் பல கோடி ரூபாய் செலவில் கார்களை வாரி வழங்குகிறது. அதேநேரம், எம்.எல்.ஏ உதவியாளர்களுக்கு ரூ.25,000 ஊதியம் நிர்ணயிக்கும் அரசு, சமுதாயத்தின் மிக முக்கியமான அடித்தட்டுப் பணிகளை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.25,000 வழங்குவதில் என்ன தயக்கம் காட்டுகிறது? எளிய உழைக்கும் மக்களுக்குரிய நியாயமான சம்பளத்தை வழங்குவதில் அரசுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: சட்டமன்றமே ரீல்ஸ்-க்காக நடத்தப்படுகிறதா? தவெக அரசை விளாசிய கனிமொழி எம்பி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share