×
 
☰

மின் தேவையை முன்கூட்டியே கணிக்காதது ஏன்? மத்திய அரசை நோக்கி அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி!

தேசிய அளவில் மின் தேவை அதிகரிப்பு குறித்து மத்திய அரசு முன்கூட்டியே கணிக்காதது ஏன் என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய அளவில் மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்கூட்டியே சரியாகக் கணிக்கத் தவறியது ஏன் என்று மத்திய பாஜக அரசுக்குத் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு மற்றும் சந்தை விலை உயர்வு குறித்துக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் மின்சாரப் பற்றாக்குறையின் உச்சகட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ₹46.09 வரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உருவானது மத்திய அரசின் முறையற்ற திட்டமிடல் மற்றும் நிர்வாகக் குளறுபடியையே காட்டுகிறது என்றும், இது மத்திய அரசின் மாபெரும் தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரத்திற்கான உண்மையான தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையேயான இடைவெளிகளை (Demand-Supply Gap) மத்திய அரசு ஏன் முன்கூட்டியே ஆய்வு செய்து உரிய திட்டமிடலை மேற்கொள்ளவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். நாட்டின் மின் தேவையை உரிய நேரத்தில் மதிப்பிடத் தவறிய விவகாரம் குறித்து மத்திய மின்சார அமைச்சகம் உடனடியாக விரிவான விசாரணை மற்றும் ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 1 லட்சம் சூரிய சக்தி மேற்கூரை..! இதான் இலக்கு.! அமைச்சர் நிர்மல்குமார் உறுதி.!

இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தேசிய அளவிலான மின் தேவையை முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், அனைத்து மாநில அரசுகளுடனும் முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி மத்திய அரசு புதிய தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அக்டோபர் மட்டுமே..! மின் கொள்முதல் சர்ச்சை..!! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share