×
 

திடீரென மூடப்பட்ட கடைகள்; ஆட்டோக்களும் ஓடவில்லை - நீலகிரியில் பரபரப்பு...!

கூடலூர் பகுதி முழுவதும் 24 மணி நேரம் கடையடைப்பு போராட்டமானது  நடத்தப்பட்டு வருகிறது.

ஊருக்குள் வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் தேசிய நெடுஞ்சாலையில் குண்டும். குழியுமாக காணப்படும் சாலைகளில் சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  கூடலூர் பகுதி முழுவதும் 24 மணி நேரம் கடையடைப்பு போராட்டமானது  நடத்தப்பட்டு வருகிறது. தனியார் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் , ஆட்டோக்கள் ஓடவில்லை.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த சமீப காலமாக வனவிலங்குகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு மாதத்தில் 5க்கும் மேற்பட்டோர் யானை தாக்கி உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி புலி தாக்கியதில் 13 பசுமாடுகள் இறந்துள்ளது. ஆனால் இதுவரை யானைகளை விரட்டவோ பசு மாடுகளை வேட்டையாடி வரும் புலி பிடிக்கவோ வனத்துறையினர் மெத்தனம் காட்டுவதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றம் சாட்டு வந்தனர்.

அதுமட்டுமின்றி கூடலூர் பகுதியில் கடந்த எட்டு வருடங்களாக சாலைகள் முழுவதும் சீர்  செய்யாத நிலையில் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக மாறி  வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு நிலப்பிரச்சனைகளை காரணம் காட்டி மக்களின் அடிப்படைத் தேவைகளும் மறுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: அன்புமணி கூட தொடர்பு வச்சுக்கிட்டா அவ்ளோதான்! கட்சி நிர்வாகிகளுக்கு ராமதாஸ் எச்சரிக்கை...

உடனடியாக தமிழக அரசு மக்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யக் கூறி கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன, குறிப்பாக ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் ஓடவில்லை. இந்த 24 மணி நேர கடையடைப்பில் வியாபாரி சங்கம் பொது நல அமைப்புகள், அனைத்துக் கட்சிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 உடனடியாக தமிழக அரசு மக்களின் கோரிக்கையை சரி செய்யவில்லை எனில் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்.. இடைக்கால அரசை வழிநடத்தப்போவது யார்..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share