கணவருக்கு தாலி பார்சல்… தகாத உறவில் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன்…!
தகாத உறவால் பெண்ணை கொலை செய்தவுடன் கணவருக்கு தாலிச் செயினை பார்சல் அனுப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தகாத உறவு அல்லது கள்ளக்காதல் எனப்படும் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் இந்திய சமூகத்தில் ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிபரங்களின்படி, காதல் விவகாரங்கள் மற்றும் திருமண உறவு சார்ந்த பிரச்சினைகள் காரணமாக நிகழும் கொலைகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
2022 ஆம் ஆண்டில், உறவு அல்லது காதல் தொடர்பான கொலைகளில் பாதிக்கப்பட்டவர்களில் 58% பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில், பெண்களை கொலை செய்யும் கொலைகளில் பெரும்பாலானவை (சுமார் 60%) கணவன் அல்லது முன்னாள் காதலரால் நிகழ்கின்றன என்று ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை பல வடிவங்களில் தோன்றுகிறது. அதில் ஒரு முக்கியமானது, தகாத உறவு சந்தேகம் அல்லது உறவு உறுதியான பிறகு நிகழும் கொலைகள். சில சமயங்களில், கள்ளக்காதலி தன் கணவரை கொலை செய்ய காதலனுடன் சதி செய்வதும் நடக்கிறது, ஆனால் பெண்கள் பலியாகும் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. கள்ளக்காதலன் தரப்பில், நிராகரிப்பு கோபம் அல்லது உடைமை உணர்வு கொலையை தூண்டுகிறது. பெண்கள் உறவை முடித்துக்கொள்ள முயலும்போது அச்சுறுத்தல் அல்லது வன்முறை அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம்... தவெக தூய சக்தியா? சேலத்தில் EPS பிரஸ் மீட்...!
தகாத உறவால் தற்போது ஒரு விபரீதம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் திருமணமான பெண்ணை கொன்று உடலை 300 அடி பள்ளத்தில் வீசிய பயங்கரம் நிகழ்ந்துள்ளது. தகாத உறவால் வெறிச்செயலில் ஈடுபட்டதுடன் பெண்ணின் கணவருக்கு தாலியை பார்சல் அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சேலத்தில் விஜய் பிரச்சாரம்? இடத்தை தேர்வு செய்யும் பணி நடக்குதாம்... தொண்டர்கள் குஷி...!