தெருநாய் கடித்து 4ம் வகுப்பு மாணவன் பலி.. சோகத்தில் மூழ்கிய பெற்றோர்..!
தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தபோது நாய் கடித்ததில் 4ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், வீராணம் இளங்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. கூலித்தொழிலாளி. இவரது மகன் கிஷோர் (9). அதேப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். கிஷோர் வழக்கத்துக்கு மாறாக சோர்வுடன் காணப்பட்டதால், நேற்று முன்தினம் சிகிச்சைக்காக வலசையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.
சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்தபோது நாய் கடித்ததன் காரணமாக ரேபிஸ் தொற்று உடல் முழுவதும் பரவி இருந்ததும் அவனது நடவடிக்கைகள் நாயை போல மாறி இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து வலசையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆலோசனைப் படி உடனடியாக சிறுவனை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறுவன் கிஷோர் உயிரிழந்தார். இதனையடுத்து சுகாதாரத் துறையினர் சிறுவனின் உடலை பெற்று பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தவெகவை உலுக்கிய அடுத்த இழப்பு... போனில் ஆறுதல் சொன்ன விஜய்..!
உயிரிழந்த சிறுவனின் பெற்றோரிடம் சுகாதாரத் துறையினர் விசாரித்தனர். அப்போது அவர்கள், "கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கிஷோர் வீட்டின் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது நாய் ஒன்று கையில் கடித்துள்ளது. எனினும், நாய் கடித்தது குறித்து எங்களிடம் கிஷோர் ஏதும் தெரிவிக்கவில்லை.
ஆனால், உடல் நிலை சரியில்லாததால் சோர்வாக இருந்ததை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். நாய் கடித்து பல நாட்கள் கழித்து சிகிச்சை அளித்த நிலையில் ரேபிஸ் தொற்றுப்பரவலை தடுக்க இயலவில்லை. எனவே, தீவிர சிகிச்சை அளித்தும் மகன் உயிரிழக்க நேரிட்டது," என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: ஜப்பானில் ஏற்படப்போகும் 9 ரிக்டர் நிலநடுக்கம்: 3 லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம்: அதிர்ச்சி தகவல்..!