“விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” - அதிமுகவின் புதிய பிரச்சாரம் தொடக்கம்!
“மின்சாரக் கட்டணம் மற்றும் வரி உயர்வைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி” - 38 மாவட்டங்களிலும் பிரச்சாரம் தீவிரம்!
தமிழகத்தில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் அரசுத் துறைகளின் கட்டண உயர்வைக் கண்டித்து, “விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற பெயரில் புதியப் பிரச்சாரத்தை அதிமுக இன்று (ஜனவரி 28) தொடங்கியுள்ளது.
திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ள பல்வேறு கட்டணங்களைக் கண்டித்து இந்தப் பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி, சொத்து வரி மற்றும் பிற அத்தியாவசியச் சேவைகளின் கட்டண உயர்வைச் சுட்டிக்காட்டி இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி என்ற தலைப்பின் மூலம், ஒவ்வொரு குடும்பமும் செலுத்தும் கூடுதல் கட்டணமே இந்த ஆட்சியின் தோல்விக்குச் சாட்சி என அதிமுக குற்றம் சாட்டுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தப் பிரச்சாரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வர்.
அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் கட்சியின் 82 மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து சமூக வலைதளங்கள் மற்றும் களப் பணிகளில் இந்தப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மக்களின் அன்றாடச் சிக்கல்களை முன்வைத்து இந்தப் பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயந்து போய் அலறுகிறார் பொம்மை முதல்வர்! ஸ்டாலினுக்கு இபிஎஸ் கடும் பதிலடி!
இதையும் படிங்க: எங்கள் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும்! 210 இடங்களில் வெல்வோம் என இபிஎஸ் சபதம்!