×
 

காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கம்! கனடா வீராங்கனையை வீழ்த்தி பிரீத்தி பவார்  சாதனை!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 54 கிலோ குத்துச்சண்டையில் கனடா வீராங்கனையை வீழ்த்திப் பிரீத்தி பவார் தங்கம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்கள் தொடர்ச்சியாகச் சாதனை படைத்து வரும் நிலையில், மகளிர்க்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

உலகளவில் புகழ்பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்திப் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மகளிருக்கான 54 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை பிரீத்தி பவார், இன்று நடைபெற்ற தங்கப் பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில் கனடா வீராங்கனையை எதிர்கொண்டார்.

இதையும் படிங்க: "இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்... காமன்வெல்தில் வெள்ளி வென்ற ஞானேஸ்வரி யாதவ்!"

ஆரம்பம் முதலே அதிரடியான பஞ்ச்களையும், நுணுக்கமான தற்காப்பு உத்திகளையும் கையாண்ட பிரீத்தி பவார், எதிரணி வீராங்கனைக்குச் சற்றும் வாய்ப்பளிக்காமல் போட்டியைத் தன் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியின் முடிவில், கனடா வீராங்கனையை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பிரீத்தி பவார், இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை உறுதி செய்து பெற்றுத் தந்தார். காமன்வெல்த் அரங்கில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள பிரீத்தி பவாருக்கு விளையாட்டு உலகினரும், இந்தியப் ரசிகர்களும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்க வேட்டை! ஒரே நாளில் 2 தங்கம்... ஜூடோவில் அசத்திய அஷ்மிதா, ஹர்ஷ் சிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share