×
 

#BREAKING: Asia Cup 2025: சும்மா சரவெடி தான்.. வெற்றி வாகைசூடிய இந்தியா..! தலையில் துண்டை போட்ட பாகிஸ்தான்..!!

துபாயில் இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், இன்று இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வென்று மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியுடன் இந்தியா இறுதிப்போட்டிக்கு நெருக்கமாக அணுகியுள்ளது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 171/5 என 171 ரன்கள் எடுத்தது, அதை இந்தியா 18.5 ஓவர்களில் 174/4 என துல்லியமாக விரட்டியது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதி, முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

அந்த வகையில் சூப்பர் 4 சுற்று நேற்று தொடங்கிய நிலையில், இன்றைய இரண்டாவது போட்டியில், இந்திய அணி தனது எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த மோதல், இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனெனில் இதில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்கு செல்லும்.

இதையும் படிங்க: #BREAKING: Asia Cup 2025: ஓமனை அடித்து துவம்சம் செய்த இந்தியா.. 21 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

இன்றைய போட்டியின் டாஸ் வெற்றியை இந்திய கேப்டன் சுர்யகுமார் யாதவ் கைப்பற்றியதோடு, பந்துவீச்சை தேர்வு செய்தார். துபாயின் ஈரப்பதம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என அவர் கூறினார். இதன்மூலம் இந்திய அணி, போட்டியின் தொடக்கத்தை பந்துவீச்சு ஆதிக்கத்துடன் தொடங்கியது. பாகிஸ்தான் அணியும் பேட்டிங் செய்ய தயாரானது. இந்த முறையும் இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் கைகுலுக்காமல் டாஸ் போட்டுச் சென்றனர்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஹிப்சதா ஃபர்ஹான் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். பக்கர் சமான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சிவம் துபே பந்துவீச்சில் சஹிப்சதா ஃபர்ஹான் 58 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். முகமது நவாஸ் 21 ரன்களில் ரன் அவுட் ஆனார். இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் சிவம் துபே 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்தியா பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இந்த காம்போ பாகிஸ்தானின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தது. இதில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா அரைசதம் அடித்து விளாசினார். மறுபுறம் சுப்மன் கில் 47 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டும் ஆகினர். தொடர்ந்து திலக் வர்மா களமிறங்க, அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 74 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து சஞ்சு சாம்சன் ஆட்டத்திற்குள் நுழைந்தார். இறுதியில் இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்திய அணியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.   

இதையும் படிங்க: ஆசிய கோப்பை சூப்பர் 4: மீண்டும் மோதும் இந்தியா-பாகிஸ்தான்.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share