2025 ஆசிய கோப்பையில் இருந்து விலகுகிறதா இந்திய அணி? நாங்க அத பத்தி பேசவே இல்லை; பிசிசிஐ!!
2025 ஆசிய கோப்பையில் இருந்து இந்திய அணி விலக இருப்பதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எதிர்கால போட்டிகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் இணைக்க வேண்டாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) கடிதம் எழுதி இருந்தது. மேலும் இந்தியா 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நேரடியாக கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டை பாகிஸ்தான் நடத்திய நிலையில், இந்தியா அங்கு செல்ல மறுத்து அந்த போட்டிகளை இந்தியா இலங்கை சென்று விளையாடியது.
இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் நடத்தியது. இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாமல் புறக்கணித்து தங்களுக்குரிய போட்டிகளை துபாயில் விளையாடி கோப்பையையும் தட்டித்தூக்கியது. இந்த நிலையில் தற்போது 2025 ஆசிய கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தொடரை பிசிசிஐ நடத்த உள்ளது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி இருக்கிறார்.
இதையும் படிங்க: RCB vs KKR போட்டி நடக்குமா? பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை... தடுமாறும் பிசிசிஐ!!
இதனால் பாகிஸ்தான் அமைச்சர் தலைவராக இருக்கும் ஒரு அமைப்பின் கீழ் நடக்கும் ஆசிய கோப்பையை இந்தியாவில் நடத்த விரும்பவில்லை என்பதோடு, அதில் இந்திய அணியும் பங்கேற்க விரும்பவில்லை என்ற முடிவை பிசிசிஐ எடுத்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஆசிய கோப்பையில் இருந்து இந்திய அணி விலகுவது, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்விக்கு மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மட்டும் இன்றி இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும் விளையாட இருக்கின்றன. அந்த அணிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இது குறித்து விரைவில் கிரிக்கெட் உலகில் பரபரப்பு எழும் என கூறப்பட்டது. இதனிடையே 2025 ஆசிய கோப்பையில் இருந்து இந்திய அணி விலக இருப்பதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. ஆசிய கோப்பை குறித்து எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. அத்தோடு, தற்போது ஐபிஎல் மற்றும் இங்கிலாந்த் தொடர்கள் மீது தான் தங்களது முழு கவனம் உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்.. சென்னையில் போட்டி உண்டா.? பிசிசிஐ குஷி அறிவிப்பு!