2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!
2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும் என முன்னாள் ஆர்சிபி அணி வீரர் முகமது கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. தற்போது நிலைமை சரியானதை அடுத்து எஞ்சிய போட்டிகள் மே 17 ஆம் தேதி தொடங்க உள்ளது.
முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பெங்களூருவில் மோத உள்ளன. இந்த சீசனில் ஆர்சிபி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்த முறை ஆர்சிபி கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் ஆர்சிபி மற்றும் இந்திய வீரர் முகமது கைஃப், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியை பாராட்டியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், ஆர்சிபி அணியைப் பற்றி பேசினால், அவர்கள் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர். பேட்டிங் அணி என்ற வார்த்தையை நான் வலியுறுத்துகிறேன்.
இதையும் படிங்க: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்.. சென்னையில் போட்டி உண்டா.? பிசிசிஐ குஷி அறிவிப்பு!
ஏனெனில் அவர்கள் எப்போதும் பேட்டிங்கில் பலமான அணியாக இருந்தனர். ஆனால் இந்த முறை ரஜத் பட்டிதார் தனது பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தி, 170-180 ரன்களை பாதுகாக்கும் போது எதிரணிகளை கட்டுப்படுத்தியுள்ளார். கோலி தனது சிறந்த ஆட்டத்தை தொடர்கிறார். ஆனால் பந்துவீச்சாளர்கள் அவர்களுக்கு வெற்றி நம்பிக்கையை அளித்துள்ளனர். சிறந்த ஆல்-ரவுண்ட் அணி பொதுவாக வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு அவர்கள் கோப்பையை வெல்ல முடியும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2009, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி, இதுவரை கோப்பையை வெல்லவில்லை. ஐபிஎல்-ல் மூன்றாவது அதிக முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக ஆர்சிபி உள்ளது. இதுவரை 9 முறை ஆர்சிபி அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த சீசனில் ஆர்சிபி அணியின் அபாரமாக ஆடி வருகிறது. இந்த முறை ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: தணிந்தது இந்தியா - பாக். போர் பதற்றம்... 2025 ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும்? வெளியானது தகவல்!!