×
 

'Impact Player of the Match': விருதை தட்டித்தூக்கிய இளம் புயல் வீரர் ஹர்திக் பாண்டியா..!!

இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு இம்பேக்ட் வீரர் விருது வழங்கப்பட்டது.

ஆசிய கோப்பை டி20 போட்டித்தொடரின் குரூப் ஏ இறுதி லீக் போட்டியில், இந்திய அணியும் ஓமன் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஷேக் சயீது ஸ்டேடியத்தில் நேற்று (செப்டம்பர் 19) நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய கேப்டன் சுர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, கில் ஆகியோர் களமிறங்கினர். கில் 5 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து சஞ்சு சாம்சன் களமிறங்க, மறுபுறம் அபிஷேக் ஷர்மா பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். சிறப்பாக விளையாடிய அவர் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அக்சர் படேல் 26 ரன்கள், திலக் வர்மா 29 ரன்கள் எடுத்தனர். சஞ்சு சாம்சன் அரை சதமடித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: #BREAKING: Asia Cup 2025: ஓமனை அடித்து துவம்சம் செய்த இந்தியா.. 21 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ஓமன் அணி களமிறங்கி பேட்டிங் செய்ய தொடங்கியது. ஓமனின் தொடக்க வீரர்களாக ஜதிந்தர் சிங் மற்றும் ஆமிர் கலீம் களம் கண்டனர். இதில் ஜதிந்தர் சிங் 32 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து ஹம்மாத் மிர்சா களம் இறங்கிய நிலையில், ஹம்மாத் மிர்சா - ஆமிர் கலீம் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ஆமிர் கலீம் 64 ரன்களில் அவுட் ஆனார்.  20 ஓவர் முடிவில் ஓமன் அணி 4 விக்கெட்டிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அனல் வீரர் ஹர்திக் பாண்டியா, நேற்று ஓமன் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய போட்டியில் அசத்தலான களப் புலி ஆட்டத்தால் 'இம்பாக்ட் பிளேயர் ஆஃப் தி மேட்ச்' விருதை தட்டிச் சென்றார். இந்த விருது, போட்டியின் முடிவை மாற்றியமைக்கும் அளவுக்கு முக்கியமான பங்களிப்பை செய்த வீரருக்கு வழங்கப்படும் ஒரு சிறப்பு மெடல் ஆகும்.

https://www.bcci.tv/bccilink/videos/bYDaHKTo

டிரெசிங் ரூமில் நடந்த சிறப்பு நிகழ்வில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பயிற்சி உதவியாளர் தயானந்த் காரணியை அழைத்து விருதை அறிவிக்கச் சொன்னார். காரணி, “இன்றைய இம்பேக்ட் பிளேயர், அனைவரின் பெருமை மற்றும் மரியாதைமிக்க, ஹர்திக் பாண்டியா” என்று அறிவித்தார். விருது பெற்ற பாண்டியா, அதை உடனே காரணிக்கு அணிவித்து, “இதை நான் காரணிக்கு அளிக்கிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஃபீல்டிங் டிரில்ஸ் முயற்சிக்கு இது. இதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார். இந்த சிறப்பு தருணம், பாண்டியாவின் பணிவான தன்மையை வெளிப்படுத்தியது.

போட்டியில் பாண்டியா, அசத்தலான பந்துவீச்சு செய்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியால் இந்தியா குரூப் ஏயில் முதலிடத்தைப் பெற்று, சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. அடுத்து, நாளை (செப்டம்பர் 21) இலங்கையுடன் மோதவுள்ள இந்திய அணி, பாண்டியாவின் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறது.

பாண்டியா, தனது உரையில், “இன்று நாம் குழுவாக சிறப்பாக விளையாடினோம். வெப்பத்தால் சோர்வு ஏற்பட்டாலும், அனைவரும் தங்கள் பங்கைச் சிறப்பாக செய்தனர். நாளைய போட்டி வேறு. அதை விளையாடும்போது மட்டும் சிந்திப்போம்” என்று தெரிவித்தார். இந்த விருது, பாண்டியாவின் தொடர்ச்சியான உச்ச செயல்பாட்டை உறுதிப்படுத்துகிறது. 2023 ல் உலகக்கோப்பை இறுதியில் அவரது பங்களிப்பு இன்னும் நினைவில் உள்ளது. இந்திய ரசிகர்கள், பாண்டியாவின் இந்த சாதனையை கொண்டாடுகின்றனர்.

இதையும் படிங்க: சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து தோல்வி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share