×
 

டி20 உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லுமா இந்தியா? இறுதி போட்டியில் இன்று நியூசிலாந்துடன்  மோதல்!

2023-ல் விட்டதை பிடிப்போம், அகமதாபாத் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவின் ஆவேச முழக்கம்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் இன்று மீண்டும் ஒரு வரலாற்றுப் போருக்குத் தயாராகிவிட்டது. ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டியில், நடப்புச் சாம்பியனான இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று இரவு மோதுகின்றன. 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இதே மைதானத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு இன்று மருந்திடப்படும் என இந்திய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

போட்டியின் தொடக்கத்திற்கு முன்னதாகத் தனது அணியினருக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியான அறிவுரையை வழங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பயணம், மீண்டும் 2023-ல் நாம் விட்டுச் சென்ற அதே மைதானத்தில் வந்து முடிவடையப் போகிறது. கடினமான சூழ்நிலைகளிலும் மனம் தளராமல் உறுதியாக இருக்க வேண்டும். அழுத்தம் இல்லாத போட்டியில் பரபரப்பு இல்லை என வீரர்களிடையே நம்பிக்கையை விதைத்தார்.

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

2007 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ள இந்தியா, இன்று வெற்றி பெற்றால் 3-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற மகுடத்தைச் சூடும்.

நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா விளையாடுவது அணிக்குப் கூடுதல் பலமாக இருக்கும். நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் பின் ஆலன் ஜோடி இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அரையிறுதியில் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சனின் பேட்டிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு ஆகியவையே இந்தியாவின் வெற்றிக்கு முக்கியத் தூண்களாகக் கருதப்படுகின்றன.

இரவு 7:00 மணிக்குத் தொடங்கவுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியைக் காண ஒட்டுமொத்த இந்தியாவே தொலைக்காட்சிகள் மற்றும் மொபைல் திரைகளின் முன்னால் தவம் கிடக்கத் தொடங்கிவிட்டது.
 

இதையும் படிங்க: இந்தியா vs பாகிஸ்தான்: டி20 உலகக் கோப்பை போட்டி நடக்குமா? அடுத்த 24 மணி நேரத்தில் இறுதி முடிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share