×
 

ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பிருக்கா..? வழிகள் என்ன..?

ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல குறைந்தபட்சம் ஒரு புள்ளி அல்லது ஒரு வெற்றி அவசியமாகும்.

ஐபிஎல் டி20 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 10 அணிகளில் 5 அணிகள் வெளியேறிவிட்ட நிலையில் மீதமுள்ள 5 அணிகளில் யாருக்கு ப்ளே ஆஃப் வாய்ப்புக் கிடைக்கப்போகிறது என்பது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணிகள் லீக் சுற்றோடு நடையைக் கட்டிவிட்ட நிலையில் மும்பை அணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெங்களூருவில் நேற்று நடக்க இருந்த  ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் ரத்தானதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: 16ம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் தொடர்? அணிகளுக்கு பறந்தது பிசிசிஐ உத்தரவு..!

இதில் கொல்கத்தா அணி13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் தொடரிலிருந்து வெளியேறியது. ஆனால், 18வது முறையாக கோப்பையை வெல்லும் நோக்கத்தோடு வந்துள்ள ஆர்சிபி அணி 12 போட்டிகளில் 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

ஆர்சிபி அணிக்கு இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன, சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியும்,  லக்னெள அணியுடனான போட்டி மட்டும் இருக்கிறது. இதில் ஒரு போட்டியில் வென்றால்கூட ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடும். ஒருவேளை 2 போட்டிகளிலும் வென்றால் 4 புள்ளிகள் பெற்று 23 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் வரலாம்.

ஆர்சிபி அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தாலும் அதன் நிகரரன்ரேட் 0.482 என்று குறைவாகவே இருக்கிறது, 2வது இடத்தில் இருக்கும் குஜராத்(0.793) அணியைவிடவும், 4வது இடத்தில் இருக்கும் மும்பை(1.156) அணியைவிடவும் ஆர்சிபி நிகரரன்ரேட் குறைவாக இருக்கிறது. இந்த 17 புள்ளிகளுடன் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்வது கடினமாகும்.

ஆர்சிபி அணி குறைந்தபட்சம் 17 புள்ளிகளுக்கு அதிகமாக இருக்கவேண்டும் அல்லது நிகரரன்ரேட் அதிகமாக இருக்கவேண்டும். முதல் 5 இடங்களில் இருக்கும் அணிகள் 17 புள்ளிகளுக்கும் மேல் பெற வாய்ப்பிருப்பதால், ஆர்சிபிக்கு இன்னும் குறைந்தபட்சம் ஒரு வெற்றி தேவை.

ஒருவேளை பஞ்சாப் கிங்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை தோற்கடித்து, கடைசி இரு ஆட்டங்களில் டெல்லி, மும்பையிடம் தோற்க வேண்டும். மும்பை அணி டெல்லி அணியை தோற்கடித்தால், ஆர்சிபி , மும்பை, குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகள் 17 புள்ளிகள் அல்லது அதற்கு அதிகமாக புள்ளிகளுடன் முடிக்கலாம்.

அப்போது நிகரரன்ரேட் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் முடிவாகும். குஜராத் அணி நாளை(19ம்தேதி) நடக்கும் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தினால் 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும். ஆதலால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல குறைந்தபட்சம் ஒரு புள்ளி அல்லது ஒரு வெற்றி அவசியமாகும்.

இதையும் படிங்க: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து.. ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று தொடக்கம்.. கொல்கத்தா - பெங்களூரு பலப்பரீட்சை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share