×
 

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து.. ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று தொடக்கம்.. கொல்கத்தா - பெங்களூரு பலப்பரீட்சை!

ஐபிஎல் டி20 தொடரில் இன்று பெங்களூருவில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் டி20 தொடரில் இன்று பெங்களூருவில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று (மே 17) மீண்டும் தொடங்குகிறது. இதற்காக ஏற்கெனவே திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கி மே 27ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதன் பிறகு மே 29, 30 ஜூன் 1 ஆகிய தேதிகளில் பிளே ஆஃப் சுற்று நடைபெறுகிறது. ஜூன் 3ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.


பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 10 நாட்கள் இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் தொடர் தொடங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுதியுள்ளது. ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணி ஏற்கனவே 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகளை குவித்து பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.
இன்னும் ஒன்றில் வெற்றி பெற்றாலே பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். எனினும் அந்த அணி லீக் சுற்றை முதல் இரு இடங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்பதை திட்டமாகக் கொண்டு செயல்படக் கூடும்.

இதையும் படிங்க: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்.. சென்னையில் போட்டி உண்டா.? பிசிசிஐ குஷி அறிவிப்பு!

அஜிங்க்ய ரஹானே தலைமையிலான நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 11 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய இரு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் லீக் சுற்றை 15 புள்ளிகளுடனே நிறைவு செய்யும். இது நிகழ்ந்தாலும் அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு என்பது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே அமையும். ஒரு வேளை இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிடும்.

பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் இன்று களமிறங்குகிறது. அதேவேளையில் கொல்கத்தா அணி கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் 2இல் வெற்றி கண்ட நிலையில் இன்று களமிறங்குகிறது.

இதையும் படிங்க: அப்போ பாகிஸ்தான்; இப்போ வங்கதேசம்.. பிசிசிஐ அதிரடி... பின்னணி என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share