×
 

ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சன் செய்தார்.

ஐபிஎல் 2026 தொடரின் 47-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வசீகரமான வெற்றியுடன் தோற்கடித்தது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த இரவு ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த லக்னோ அணி தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய ஸ்கோரை எட்டியது.

லக்னோ அணியின் தொடக்க வீரர் மிட்சேல் மார்ஷ் 44 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். எனினும், ஜோஸ் இங்கிலிஷ் 13 ரன்களில் ஏமாற்றமளித்து பெவிலியன் திரும்பினார். இதன் பிறகு களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் மும்பை பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். வெறும் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் எட்டு சிக்ஸர்களுடன் 63 ரன்கள் விளாசிய அவரது மின்னல் ஆட்டம் லக்னோ அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. 

மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று ஆடிய ஏடன் மார்க்ரம் 31 ரன்களும், ஹிம்மத் சிங் 40 ரன்களும் சேர்த்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் என்ற அதிரடி ஸ்கோரைப் பதிவு செய்தது. இந்த இலக்கை நோக்கி மும்பை அணி 229 ரன்கள் தேவை என்ற சவாலான இலக்குடன் களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஜோடியான ரோகித் சர்மா மற்றும் ரிக்கெல்டன் இருவரும் லக்னோ பந்துவீச்சை முழுமையாக சிதைத்தனர்.

இதையும் படிங்க: சிஎஸ்கே அதிரடி வெற்றி! மும்பையை வீழ்த்தி ருதுராஜ் கெய்க்வாட் படை அபார சாதனை!

இருவரும் வேகமாக அரைசதத்தைத் தாண்டி அணியை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றனர். ரிக்கெல்டன் 32 பந்துகளில் 83 ரன்கள் குவித்து அவுட்டானார். அதைத் தொடர்ந்து ரோகித் சர்மா 44 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அணியின் நம்பிக்கையை உயர்த்தினார்.திலக் வர்மா 11 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 7 பந்துகளில் 12 ரன்களிலும் விக்கெட்டை இழந்ததால் சற்று அழுத்தம் ஏற்பட்டது. எனினும், நமந்தீர் துர்க்கா மற்றும் வில் ஜேக்ஸ் ஜோடி சேர்ந்து அணியை இலக்கை நோக்கி அழைத்துச் சென்றது.

18.4 ஓவர்களிலேயே மும்பை அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.லக்னோ அணியின் சித்தார்த் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மும்பை தரப்பில் நமந்தீர் 12 பந்துகளில் 23 ரன்களுடனும், வில் ஜேக்ஸ் 4 பந்துகளில் 10 ரன்களுடனும் களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் மேலும் வலுப்பெற்றுள்ளது. பூரனின் அதிரடியும், ரோகித்-ரிக்கெல்டன் ஜோடியின் வெடிகுண்டு பேட்டிங்கும் இந்த போட்டியின் சிறப்பம்சங்களாக அமைந்தன.

இதையும் படிங்க: வான்கடேவில் ரன் மழை! கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ருத்ரதாண்டவத்தால் மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share