படிக்கலுக்கு பதில் வேறொரு வீரர் அணியில் சேர்ப்பு... ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் முக்கிய தகவல்!!
முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டனாக தான் செயல்படுவதாக ஜிதேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக நான் முதன்முறையாக கேப்டனாக செயல்படுகிறேன். கடந்த ஆண்டு இதே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டேன்.
இப்போது நாங்கள் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளோம். ஆடுகளத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். இந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்க விரும்புகிறோம். அங்கிருந்து பிளே ஆஃப் சுற்றில் விளையாட வேண்டும் என நினைக்கிறோம். எங்கள் அணி நிர்வாகம் வீரர்களை நன்றாக பார்த்துக் கொள்கிறது. அணியில் நல்ல சூழ்நிலை மற்றும் கலாச்சாரம் நிலவுகிறது.
இதையும் படிங்க: மோசமாக விளையாடிய குஜராத் அணி... அசால்ட்டாக விளையாடிய LSG-க்கு ஆறுதல் வெற்றி!!
நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல நினைக்கிறோம். ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக விளையாடுகிறார். தேவ்தத் படிக்கலுக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், நாங்கள் கடந்த சில போட்டிகளாக நல்ல விதமாக விளையாடி வருகிறோம். அடுத்த ஆண்டுக்கான அணியை இப்போது கட்டமைத்து வருகிறோம்.
நாங்கள் தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம். எங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாட வேண்டும். நாங்கள் கடந்த போட்டியில் 200 ரன்களை எளிதாக சேசிங் செய்தோம். நானும் சமியும் இணைந்து பந்துவீசுகிறோம். அடுத்து நடைபெற உள்ள டெஸ்ட் கிரிக்கெட்க்காகத் தயாராகி வருகிறோம். டிராவிஸ் ஹெட், அபிநவ் மனோகர் மற்றும் ஜெயதேவ் உணட்கட் ஆகியோர் அணிக்குத் திரும்பி இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாங்க பெருமைக்கு தான் விளையாடுகிறோம்.. கவலையாக சொன்ன ரிஷப் பண்ட்!!