×
 

மோசமாக விளையாடிய குஜராத் அணி... அசால்ட்டாக விளையாடிய LSG-க்கு ஆறுதல் வெற்றி!!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி குஜராத் அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் ஏய்டன் மார்க்கரம் ஆகியோர் அபாரமாக விளையாடினர். எய்டன் மார்க்கரம் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் என 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் நிக்கோலஸ் பூரான் - மிட்செல் மார்ஸ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

நிக்கோலஸ் பூரான் 5 சிக்சர்,  4 பவுண்டரி என 27 பந்துகளில் அவர் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் களமிறங்கிய பந்த் 2 சிக்சர்களை விளாசி 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். பூரான் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஸ் 64 பந்துகளில் 117 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் அடங்கும்.  இதன்மூலம் 20 ஓவர் முடிவில் லக்னோ 2 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: நாங்க பெருமைக்கு தான் விளையாடுகிறோம்.. கவலையாக சொன்ன ரிஷப் பண்ட்!!

236 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சாய் சுதர்ஷன் மற்றும் சுப்மென் கில் தொடக்கம் முதலே தடுமாறினர். சாய் சுதர்ஷன் 21 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் சுப்மென் கில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து ஜோஷ் பட்லர் மற்றும் ரூதர்போர்ட் கூட்டணி இணைந்து விளையாடியது. ஜோஷ் பட்லர் 33 ரன்களிலும் ரூதர்போர்ட் 38 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் குஜராத் அணி ரன்களை குவிக்க தடுமாறியது.

அப்போது களமிறங்கிய ஷாருக்கான் சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் மிக சொற்ப ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 20 முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதை அடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: 11வது முறை பிளே ஆப்-க்கு முன்னேறிய மும்பை அணி... 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share