சன் ரைசர்ஸ் லீட்ஸ் செய்தது சரியா? கரிச்சு கொட்டும் கிரிக்கெட் ரசிகர்கள்? பாக்., வீரர் ரூ.2.34 கோடிக்கு ஏலம்!!
இங்கிலாந்தில் நடைபெறும், 'தி ஹண்ரட்' கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், பாகிஸ்தானின் அப்ரார் அஹமதை, சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெறும் 'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹமதை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (மார்ச் 12, 2026) லண்டனில் நடைபெற்ற இந்த ஏலத்தில், சன் குழுமத்துக்கு சொந்தமான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, அப்ரார் அஹமதை £190,000 (இந்திய மதிப்பில் சுமார் 2.34 கோடி ரூபாய்) கொடுத்து ஏலம் எடுத்தது.
இது இந்திய உரிமையாளர்கள் கொண்ட ஹண்ட்ரட் அணிகளில் பாகிஸ்தான் வீரரை முதல்முறையாக ஒரு அணி வாங்கிய சம்பவமாகும். ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியுடன் போட்டியிட்டு இறுதியில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: "LIFETIME ACHIEVEMENT AWARD"..!! இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்-க்கு கிடைத்த கௌரவம்..!!
இந்நிலையில், சன் குழுமத்தின் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளர்கள்) சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி பாகிஸ்தான் வீரரை வாங்கியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. "தேசிய உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர்", "ஐபிஎல் உரிமையாளர்கள் இப்படி செய்வது ஏற்க முடியாது" என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிலர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏலத்தில் அப்ரார் அஹமது £75,000 அடிப்படை விலையுடன் தொடங்கினார். சன்ரைசர்ஸ் £130,000இலிருந்து ஏலம் தொடங்கி, போட்டியாளர்களை முந்தி £190,000க்கு வாங்கியது. இது ஹண்ட்ரட் தொடரில் இந்திய உரிமையாளர்கள் கொண்ட அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்க்கும் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றாலும், ரசிகர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது.
இந்த முடிவு கிரிக்கெட் விளையாட்டின் அரசியல் தாக்கங்களை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் என்றாலும், ரசிகர்களின் கோபம் அடங்கவில்லை.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜாக்பாட்..!! ரூ.131 கோடி பரிசு... பிசிசிஐ மாஸ் அறிவிப்பு..!!