×
 

11வது முறை பிளே ஆப்-க்கு முன்னேறிய மும்பை அணி... 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப்-க்கு முன்னேறியது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய ஆட்டம் டெல்லி அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா வெறும் ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து ரியான் ரிக்கல்டன் நிதானமாக விளையாடி 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்சர்கள் அடங்கும். இதேபோன்று வில் ஜாக்ஸ் 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் சூரியகுமார் யாதவும் திலக் வர்மாவும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கனை சேர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 27 பந்துகளில் வெறும் 27 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் மூன்று ரன்களில் வெளியேறினார். கடைசி இரண்டு ஓவர்களில் சூரியகுமார் மற்றும் நமன் தீர் ஆகியோர் அபாரமாக விளையாடினர். சூரியகுமார் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டர்களும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.

இதையும் படிங்க: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று, இறுதிப் போட்டி எங்கு நடக்கிறது.? பிசிசிஐ அறிவிப்பு.!

அதேபோல் நமன் தீர் 8 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. 181 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் டூ பிளசிஸ் துவக்கமே முதலே தடுமாறினர். டூ பிளசிஸ் 6 அன்களில் வெளியேறினார். கே.எல்.ராகுல் 11 ரன்களில் வெளியேறினார். 65 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி அணிக்கு சமீர் ரிஸ்வி ஓரளவு நம்பிக்கை கொடுத்தார்.

எனினும், அவர் நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. சாண்ட்னர் பந்தில் 39 ரன்களில் போல்டு ஆனார். அதன் பிறகு டெல்லி அணியின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்து போனது. பின்னர் களமிறங்கிய வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். 18.2 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் டெல்லி அணி 121 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிளே ஆஃப்பில் இருந்து வெளியேறியது.

இதையும் படிங்க: மீண்டும் தோல்வியை தழுவியது CSK அணி... 6 விக்கெட் வித்தியாசத்தில் RR ஆறுதல் வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share