அப்போ மழை; இப்போ தொழில்நுட்ப கோளாறு... கைவிடப்பட்ட பஞ்சாப் vs டெல்லி இடையேயான போட்டி!!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பஞ்சாப் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையேயான போட்டி கைவிடப்பட்டது.
2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் டெல்லி அணியும் மோதின. முன்னதாக மழை காரணமாக ஆட்டம் தாமாதமானது. நீண்ட நேரத்திற்கு பின்பு மழை நின்று ஆட்டம் தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதை அடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். இதில் பிரியான்ஷ் ஆர்யா மிக சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம் பிரப்சிம்ரன் சிங் 28 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்திருந்தார். பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் பேட்டிங் செய்திருந்த நிலையில், திடீரென மைதானத்தில் இருந்த ஒளி விளக்குகள் அமர்ந்தன. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டதோடு, அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
இதையும் படிங்க: PBKS vs DC இடையேயான போட்டிக்கு சிக்கல்... டாஸ் போட தடையாக இருக்கும் மழை!!
இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பல்வேறு விளக்கங்களையும் அளித்திருக்கிறது. இந்த நிலையில் இன்று திடீரென பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறி வைத்து தாக்குதலை தொடங்கியது. ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த முயற்சிகளை பாகிஸ்தான் செய்தது. ஆனால் அதனை இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்தது. இதனிடையே பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முயற்சி காரணமாக தரம்சாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக தாமதமாக தொடங்கிய நிலையில், பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து வந்தது. அப்போது திடீரென மைதானத்தில் இருந்த ஒளி விளக்குகள் அணைக்கப்பட்டு, வீரர்கள் உடனடியாக ஓய்வறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதேபோல் வீரர்களும் உடனடியாக அங்கிருந்து ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்... கேகேஆர் அணிக்கு பிளே ஆஃப் கனவை தகர்த்த சிஎஸ்கே!!