×
 

மழையால் தப்பித்த DC... ஏமாற்றத்தில் SRH; இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் தொடக்கம் முதலே மோசமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் நோக்கி சென்றனர்.

ஆட்டத்தின் முதல் பந்திலேயே கருண் நாயர், இசான் கிஷனிடம் கேட்ச் ஆகி கோல்டன் டக் ஆனார். இதேபோன்று டுபிளசிஸ் மூன்று ரன்களிலும், அபிஷேக் போரெல் எட்டு ரன்களிலும் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்சர் பட்டேல் ஆறு ரன்களிலும், நட்சத்திர வீரர் கே எல் ராகுல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.இதன் மூலம் டெல்லி அணி 29 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையும் படிங்க: எங்களுக்கு இந்த தொடரில் சிறந்த போட்டி அமையவில்லை.. வேதனையை வெளிப்படுத்திய கம்மின்ஸ்!!

இதேபோன்று விபராஜ் நிகம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி மிகவும் மோசமான ஒரு நிலையில் இருந்தது. அப்போது களத்திற்கு வந்த டிஸ்டன் ஸ்டெப்ஸ் மற்றும் அஸ்டோஸ் சர்மா ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 36 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். அஸ்டோஸ் சர்மா 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

இதில் மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரி அடங்கும். இதன் மூலம் டெல்லி அணி கௌரவமான இலக்கை எட்டியது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் குவித்தது. இதனிடையே மழை காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆட்டம் தாமாதமானது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதை அடுத்து இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அபார பந்துவீச்சால் CSK-வை சுருட்டிய RCB... த்ரில் வெற்றியால் புள்ளிப்பட்டியலில் முதலிடம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share