×
 

பாகிஸ்தானுக்கு தொடரும் சர்வதேச அவமானம்..! காரித் துப்பிய வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்..!

 கிரிக்கெட் வீரர் டாம் கரன் ஒரு குழந்தையைப் போல அழுதார். பாகிஸ்தானுக்கு சர்வதேச அவமானம் தொடர்கிறது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலின் மத்தியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, பாகிஸ்தானை விட்டு தானும் மற்ற வெளிநாட்டு வீரர்களும் துபாய் சென்றடைந்ததில் நிம்மதி அடைந்ததாக வங்கதேச லெக் ஸ்பின்னர் ரிஷாத் ஹொசைன் ஏற்கெனவே தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்த பதட்டங்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் 2025 ஐ இடைநிறுத்தியது. அடுத்து, வெள்ளிக்கிழமை பிஎஸ்எல் போடிகளை ஒத்திவைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  அறிவித்தது.

இந்நிலையில், நியூசிலாந்தின் பிஎஸ்எல் கிரிக்கெட் வீரர் டேரில் மிட்செல் ''இனி மீண்டும் ஒருபோதும் பாகிஸ்தானுக்குத் திரும்ப மாட்டேன்'' என்று கூறுகிறார். இந்த போட்டியை எண்ணி கிரிக்கெட் வீரர் டாம் கரன் ஒரு குழந்தையைப் போல அழுதார். பாகிஸ்தானுக்கு சர்வதேச அவமானம் தொடர்கிறது.

இதையும் படிங்க: 16ம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் தொடர்? அணிகளுக்கு பறந்தது பிசிசிஐ உத்தரவு..!

பாகிஸ்தான் சூப்பர் லீக் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. மிட்செல் மட்டுமல்ல, பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் விரைவில் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்பினர்.

நியூசிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல், குறிப்பாக இந்த சூழ்நிலைகளில், வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் திகிலடைந்ததால், 'பாகிஸ்தானுக்குத் திரும்ப மாட்டேன்' என்று தன்னிடம் கூறியதாகவும் ரிஷாத் கூறினார். "சாம் பில்லிங்ஸ், டேரில் மிட்செல், குஷால் பெரேரா, டேவிட் வைஸ், டாம் கரன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் மிகவும் பயந்து போனார்கள்.

துபாய் விமான நிலையத்தில் ரிஷாத் இதுகுறித்து ''துபாயில் தரையிறங்கிய மிட்செல், இனி ஒருபோதும் பாகிஸ்தானுக்குச் செல்ல மாட்டேன் என்று என்னிடம் கூறினார்.  ஒட்டுமொத்தமாக, அவர்கள் அனைவரும் திகிலடைந்தனர். கவலையோடு அழுது கொண்டு இருந்த கிரிக்கெட் வீரர் டாம் கரனை ஆறுதல்படுத்த கடினமாக இருந்தது. டாம் கரன் விமான நிலையத்திற்குச் சென்றார்.ஆனால் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டார். பின்னர் அவர் ஒரு சிறு குழந்தையைப் போல அழத் தொடங்கினார். அவரைத் தேற்ற இரண்டு, மூன்று பேர் தேவைப்பட்டனர்" என்று அவர் மேலும் கூறினார்.

ரிஷாத் லாகூர் க்வாலண்டர்ஸும் அணியின்  இருந்தார். வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணாவுடன்  பிஎஸ்எல் 2025 இல் பங்கேற்ற இரண்டு வங்காளதேச வீரர்கள். பாகிஸ்தான் லீக்கில் உள்ள அனைத்து வெளிநாட்டு வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இணைப்பு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரிஷாத்  இதுகுறித்து, “அல்ஹம்துலில்லாஹ், ஒரு நெருக்கடியைக் கடந்து நாங்கள் துபாயை அடைந்துவிட்டோம், இப்போது நான் நன்றாக உணர்கிறேன். துபாயில் தரையிறங்கிய பிறகு, விமான நிலையத்திலிருந்து நாங்கள் புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு விமான நிலையத்தைத் தாக்கியதாகக் கேள்விப்பட்டோம். செய்தி பயமாகவும் சோகமாகவும் இருந்தது. இப்போது துபாயை அடைந்த பிறகு நாங்கள் நிம்மதியாக உணர்கிறோம். எங்களது குடும்பத்தினர் சில தூக்கமில்லாத இரவுகளைக் கழித்தனர்''" என்று அவர் கூறினார்.

ரிஷாத் மேலும் இதுகுறித்து, ''பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி ஆரம்பத்தில் மீதமுள்ள பிஎஸ்எல் போட்டிகளை கராச்சியில் நடத்த விரும்பினார். ஆனாலும், பல வீரர்கள் பாதுகாப்பு கவலைகளை அவரிடம் எழுப்பிய பின்னர் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: வெளிநாட்டு வீரர்களின் உயிருடன் விளையாடிய பாக்., கிரிக்கெட் வாரியம்... அம்பலமான கீழ்த்தரச் செயல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share